ஆளுநரை வைத்து திமுகவின் சித்தாந்தத்தை புகழ்பாட வைக்க முடியாது.. வானதி சீனிவாசன் பளீர்..!

By vinoth kumarFirst Published Jan 9, 2023, 1:59 PM IST
Highlights

ஆளுநர் உரையின் போது கூட்டணி கட்சிகளை தூண்டிவிட்டு தங்களுக்கு ஒன்றும் தெரியாதது போல் செயல்படுகிறது ஆளும் திமுக. நீட் விவகாரத்தில் ஆளுநர் கேட்டத்தை அரசு பொது வெளியில் ஏன் சொல்ல மறுக்கிறது. 

ஆளுநர் உரையின் போது கூட்டணி கட்சிகளை தூண்டிவிட்டு தங்களுக்கு ஒன்றும் தெரியாதது போல் செயல்படுகிறது ஆளும் திமுக என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் ஆர்.என். ரவியின் உரையுடன் கூட்டம் தொடங்கியது. தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் அரசு தயாரித்து கொடுத்த உரையை முறையாக வாசிக்கவில்லை என்று  தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார். தந்தை பெரியார், அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் பெயர்களை சொல்லாமல் தவிர்த்துள்ளதாக முதல்வர் கூறினார். மேலும், சில இடங்களில் தமிழ்நாடு அரசு என்ற வார்த்தைக்குப் பதிலாக இந்த அரசு என்று ஆர்.என். ரவி குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில், தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை. அச்சடிக்கப்பட்ட உரை மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெறும். ஆளுநர் சொந்தமாக சேர்த்துப்படித்து எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது என கூறி சட்டப்பேரவையில் ஆளுநர் முன்பே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். ஆளுநரின் செயலை முதல்வர் சட்டப்பேரவையிலேயே விமர்சித்து கொண்டு இருந்த போதே கூட்டத்திலிருந்து பாதியிலேயே ஆளுநர் வெளியேறினர். 

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்;- ஆளுநர் உரையின் போது கூட்டணி கட்சிகளை தூண்டிவிட்டு தங்களுக்கு ஒன்றும் தெரியாதது போல் செயல்படுகிறது ஆளும் திமுக. நீட் விவகாரத்தில் ஆளுநர் கேட்டத்தை அரசு பொது வெளியில் ஏன் சொல்ல மறுக்கிறது. ஆளுநர் உரையை கூட அவரிடம் பேசி ஒப்புதல் வாங்காததை இந்த நிகழ்வு காட்டுகிறது. ஆளுநரை வைத்து திமுகவின் சித்தாந்தத்தை புகழ்பாட வைக்க நினைக்கிறார்கள். இதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. உங்கள் சித்தாந்தத்தை ஆளுநர் மீது நீங்கள் திணித்துள்ளீர்கள். அரசு சொல்வதை மட்டுமே பேச வேண்டும் என்ற நிர்பந்தம் ஆளுநருக்கு இல்லை என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

click me!