போடி மக்களுக்கு எதுவும் செய்யாமல் கேரளாவில் ஆயில் மசாஜ் செய்கிறார்.! ஓபிஎஸ்யை விளாசும் தங்க தமிழ் செல்வன்

By Ajmal Khan  |  First Published May 25, 2023, 9:44 AM IST

15 ஆண்டுகளாக போடி சட்டமன்ற தொகுதியில் ஜெயித்த ஓ.பன்னீர்செல்வம் போடி தொகுதிக்கு எதுவுமே செய்யாமல் கேரளாவில் ஆயில் மசாஜ் செய்து வருவதாக தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். 


கொட்டகுடி கூட்டு குடிநீர் திட்டம்

போடிநாயக்கனூரில் 100 கோடி ரூபாய் செயல்திட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள முல்லைப் பெரியாறு கொட்டகுடி கூட்டு குடிநீர்  அபிவிருத்தி திட்டத்தை தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தொடங்கி வைக்க உள்ளனர். இது தொடர்பாக தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த  தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ் செல்வன், வரும் 28 ஆம் தேதி  முல்லைப் பெரியாறு கொட்டகுடி கூட்டு குடிநீர்  அபிவிருத்தி திட்டம் தொடங்கப்பட இருப்பதாக தெரிவித்தார்.

Tap to resize

Latest Videos

கொட்டக்குடி  ஆற்றின் குறுக்கே கொம்பு தூக்கி அருகே அணைகட்ட ரூபாய் 500 கோடி ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்துள்ளதாகவும், விரைவில் அந்த திட்ட  பணியும் தொடங்கும் என்றும் கூறினார். திட்டத்தின் தொடங்க விழாவிற்கு போடி சட்டமன்ற உறுப்பினர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுக்கப்படுமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர்,  

தந்தை பெயரை சொல்லி உடன்பிறந்த அண்ணனையே விரட்டி அடித்தவர் ஸ்டாலின்.. தங்கம் தென்னரசை விளாசிய ஜெயக்குமார்.!

கேரளாவில் மசாஜ் செய்யும் ஓபிஎஸ்

சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் அவருக்கு அழைப்பு விடுக்கப்படும் என கூறினார். வருவதும், வராமல் இருப்பதும் அவருடைய தனி விருப்பம் என்றும் தெரிவித்தார்.  போடி சட்டமன்ற தொகுதியில் ஜெயித்ததற்கு பிறகு இதுவரை அவர் எத்தனை முறை போடிநாயக்கனூருக்கு வந்துள்ளார்? என கேள்வி எழுப்பிய தங்க தமிழ் செல்வன், என்றும் தோற்றுப்போன தங்க தமிழ்ச்செல்வன் தான் அடிக்கடி போடிநாயக்கனூருக்கு வருகை தந்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதாகவும் கூறினார். 15 ஆண்டுகளாக அமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் போடிக்கு எந்த ஒரு திட்டங்களும் கொண்டு வரவில்லை என்றும் எம்எல்ஏவாக ஆன ஓ.பன்னீர்செல்வம் கேரளாவில் ஆயில் மசாஜ் செய்து வருவதாக தகவல் வந்துள்ளதாக கூறினார். 

இதையும் படியுங்கள்

சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு நேரடி விமான சேவை..! சிங்கப்பூர் உள்துறை அமைச்சருக்கு உறுதி அளித்த ஸ்டாலின்

click me!