நாடாளுமன்ற திறப்பு விழாவை 19 எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு... அதிமுக பங்கேற்பதாக தகவல்!!

By Narendran SFirst Published May 24, 2023, 11:44 PM IST
Highlights

நாடாளுமன்ற திறப்பு விழாவை 19 எதிர்க்கட்சிகள் விழாவை புறக்கணிக்கும் நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக பங்கேற்பதாக அறிவித்துள்ளது. 

நாடாளுமன்ற திறப்பு விழாவை 19 எதிர்க்கட்சிகள் விழாவை புறக்கணிக்கும் நிலையில்அதிமுக பங்கேற்பதாக அறிவித்துள்ளது. டெல்லியில்  64ஆயிரத்து 500 சதுர அடியில் , முக்கோண வடிவில், 4 மாடிகளுடன்  புதிய நாடாளுமன்ற கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை வருகிற 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். முறைப்படி நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா விவகாரம்... திட்டமிட்டு உள்நோக்கத்தோடு செய்தது; திருமாவளவன் குற்றச்சாட்டு

மேலும் இதனை வலியுறுத்தி திமுக, விசிக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி), சிவசேனா (யுபிடி), திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி), ஜனதா தளம் (ஐக்கிய) உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற  கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளன. இந்த நிலையில் விழாவை புறக்கணிக்கும்  முடிவை எதிர்க்கட்சிகள் மறுபரீசிலனை செய்யவேண்டும் என்றும், விழாவில் பங்கேற்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர்  பிரகலாத் ஜோஷி எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க வேண்டும்... முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!!

மே.28ல் நடைபெறவுள்ள புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்களவை சபாநாயகர், மாநிலங்களை தலைவர் அலுவலகங்களில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 19 எதிர்க்கட்சிகள் விழாவை புறக்கணிக்கும் நிலையில், அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்கள் தம்பிதுரை, சண்முகம், சந்திர சேகரன் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

click me!