சிங்கப்பூரின் சிற்பி லீ குவான் யூவுக்கு தமிழ்நாட்டின் மன்னார்குடியில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரின் சிற்பி லீ குவான் யூவுக்கு தமிழ்நாட்டின் மன்னார்குடியில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்தும் கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில், தமிழ்நாடு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், உலகின் சிறந்த நாடுகளில் ஒன்று சிங்கப்பூர்.
இதையும் படிங்க: நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவில் குடியரசுத்தலைவர் அவமதிப்பு… வெங்கடேசன் எம்.பி கண்டனம்!!
அழகிலும், அமைதியிலும் தலைசிறந்த நாடு சிங்கப்பூர். நகர நிர்வாகத்தில் அதிகபட்ச தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் நாடு சிங்கப்பூர். தமிழர் வாழாத நாடு இந்த பூமியிலே இல்லை. தமிழர்களுக்கு தி.மு.க. அரசு கலங்கரை விளக்கம்.சிங்கப்பூரில் இருந்தாலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கையில் தமிழ்நாட்டில் இருப்பதாகவே கருதுகிறேன். திராவிட இயக்கத்தால் வாழ்ந்த தமிழர்களை காணவே சிங்கப்பூர் வந்துள்ளேன். சிங்கப்பூரின் சிற்பி லீ குவான் யூவுக்கு தமிழ்நாட்டின் மன்னார்குடியில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும்.
இதையும் படிங்க: தன்னை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்கள் மீது பரிதாபப்படுகிறேன் - ஆளுநர் தமிழிசை
மன்னார்குடியில் லீ குவான் யூ பெயரில் நூலகம் அமைக்கப்படும். இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டிலிருந்து எழுதப்பட வேண்டும். தமிழால் இணைந்துள்ள நம்மை மதமோ, சாதியோ பிளவுப்படுத்த முடியாது. சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்கள் தமிழ்நாட்டில் வந்து தொழில் தொடங்க வேண்டும். அதற்கான வசதிகளை தமிழ்நாடு அரசு செய்துதரும். அடுத்தாண்டு முஇதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் நிறுவனங்கள் அதிகளவில் இடம்பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.