
ஜெயலலிதா மரணம் தொடர்பான உண்மை நீதி விசாரணையில் வெளிவரும் என நம்புவதாகவும், ஜெயலலிதா மரணத்தில் அமைச்சர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசுவது வேறு மாதிரியாக உள்ளது எனவும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
ஜெ மரணம் குறித்து ஒபிஎஸ் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதனால் அணிகள் இணைப்பிற்காக விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
அதன்படி தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமயில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்திரராஜன், ஜெயலலிதா மரணம் தொடர்பான உண்மை நீதி விசாரணையில் வெளிவரும் என நம்புவதாகவும், ஜெயலலிதா மரணத்தில் அமைச்சர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசுவது வேறு மாதிரியாக உள்ளது எனவும் தெரிவித்தார்.
மேலும் அனைவரின் சந்தேகமும் தீரும் வகையில், ஜெ மரணம் குறித்த நீதி விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும் எனவும், சிபிஐ விசாரணை தற்போது தேவையில்லை எனவும் குறிப்பிட்டார்.