
அதிமுகவில் பிளவு என்பதோ, அணி என்பதோ கிடையாது. அரசியலில் கருத்து வேறுபாடு வரலாம். அந்த கருத்து வேறுபாடு காரணமாகத்தான் சிலர் பிரிந்து இருப்பதாக மக்களைவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக சுக்கு நூறாக உடைந்து கட்சி சின்னாபின்னமாகி போயுள்ளது.
எடப்பாடி தரப்பு ஒரு அணி, ஒபிஎஸ் தரப்பு ஒரு அணி, தினகரன் தரப்பு ஒரு அணி, தீபா தரப்பு ஒரு அணி என பிரிந்து கொண்டே செல்கிறது.
ஒ.பி.எஸ் அணியும் இ.பி.எஸ் அணியும் இணைவதாக தொண்டர்களுக்கு ஆசைகாட்டி மோசம் செய்துவிட்டது.
அனால் தம்பிதுரை அப்போதிலிருந்தே இரு அணிகளும் இணைவதில் தூணாக விளங்குவேன் என தெரிவித்து வருகிறார்.
இதனிடையே இன்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :
ஆட்சிப் பொறுப்பும், கட்சி பொறுப்பும் ஒருவர் இடத்தில் இருக்க வேண்டும் என்பதை தான் வரவேற்றோம். ஆனால் இன்று சூழ்நிலை மாறுபட்டிருக்கின்றது.
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி எவ்வாறு நடைபெற்றதோ அதேபோன்று தற்போதுள்ள ஆட்சியையும் மக்களுக்கான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திக் கொண்டு வருகிறது.
இரு அணிகளும் இணைய வேண்டும் என்பது தான் கழகத்தின் ஒட்டு மொத்த தொண்டர்களின் எண்ணம்.
அதிமுகவில் பிளவு என்பதோ, அணி என்பதோ கிடையாது. அரசியலில் கருத்து வேறுபாடு வரலாம். அந்த கருத்து வேறுபாடு காரணமாகத்தான் சிலர் பிரிந்து இருக்கிறார்கள்.
அதிமுகவிற்குள் பிளவு இல்லை என்பதால் தான் ஆர்.கே.நகர் தேர்தலில் கூட தற்காலிகமாகத்தான் சின்னம் முடக்கி வைக்கப்பட்டுள்ளதே தவிர நிரந்தரமாக முடக்கப்படவில்லை.
மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு எங்களது ஆதரவு கிடையாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.