
திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் மற்றும் வைர விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில், நாட்டில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர்.
இதற்கு பதில் அளித்தபடி, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், தனது டுவிட்டர் பக்கத்தில் பல்வேறு கருத்துகளை பதிவு செய்தார். அதில், “இது வைர விழா அல்ல. வையிர விழா என குறிப்பிட்டுள்ளார்.
தி.மு.க தலைவர் கருணாநிதியின் வைரவிழா சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்ற கோலாகலமாக கொண்டாட்டப்பட்டது. அந்த விழாவில் ராகுல்காந்தி, டி.ராஜா, நிதிஷ்குமார், சீத்தாராம் யெச்சூரி, பரூக் அப்துல்லா உப்ட பல்வேறு கட்சி தலைவர்கள் பேசினார்கள்.
அதில், மத்திய அரசின் நடவடிக்கைகள், அரசின் சட்ட திட்டங்கள், புதிய உத்தரவுகள் குறித்து விமர்சித்து பேசினர்.
இந்த விழாவுக்கு, பாஜகவுக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கவில்லை. இதனால், பாஜகவினர் பல்வேறு கருத்துகளை கூறி வந்தனர்.
நேற்று மாலை கருணாநிதியின் வைரவிழா நேற்று நடைபெற்று கொண்டிருந்த அதே வேளையில், விழாவில் பங்குபெற்ற அனைவரையும் விடாமல் விமர்சித்து, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துகளை பதவி செய்து கொண்டிருந்தார் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன்.
அவர் டுவிட் செய்த கருத்துக்கள் பின் வருமாறு:-
“திமுகவுக்கு ஆட்சி பெரிதல்ல கொள்கையே பெரிது..என ஸ்டாலின் பேச்சு
ஆம் கொள்ளையே பெரிது. என்றுதான் காதில்விழுந்தது விஞ்ஞானபூர்வ ஊழல்வாதிகள் அன்றோ”
“இந்தியாவில் இப்போது அறிவிக்கப்படாத எமர்ஜன்சி.. உமர்அப்துல்லா.. அன்று அவசர நிலைப்பிரகடனம் செய்த இந்திரா பேரன் ராகுல் மேடையில் ஷேக்அப்துல்லா பேரன் உரை”
“முத்தமிழறிஞரின் விழாவில் ஒலித்த இந்தி உரைக்கு கைதட்டல் வரவேற்பு இந்தியை எதிர்த்தவர்கள் ரகசியமாக இந்திபடிப்பதுதெரிகிறது ? ஏமாந்தது தமிழர்களே!”
“ஸ்டாலின் முதல்வராகி பூரண மதுவிலக்கு கொண்டு வர நிதிஷ் கோரிக்கை.... தமிழகத்தில் இன்று வீதிக்கு வீதி மக்கள் போராடும் மதுவை கொண்டு வந்ததே திமுகதானே”
“இது வைர விழா அல்ல. அனைத்து கட்சியினரும் சேர்ந்து வையிர விழா”
இவ்வாறான கருத்துக்களை அவர் பதிவு செய்தார்.