பாஜகவின் கட்டுப்பாட்டில்தான் தமிழக அரசு உள்ளது - ராகுல்காந்தி பகீர் குற்றச்சாட்டு

 
Published : Jun 04, 2017, 02:21 PM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
பாஜகவின் கட்டுப்பாட்டில்தான் தமிழக அரசு உள்ளது - ராகுல்காந்தி பகீர் குற்றச்சாட்டு

சுருக்கம்

bharathiya janatha party arrested in tamilnadu government by rahulgandhi condemned

தமிழக அரசை மத்தியில் ஆளும் பாஜக அரசு, கட்டுப்படுத்தி வைத்துள்ளது. தமிழக மக்களிடம் பாஜக அரசு, தேவையில்லாத திணிப்பை புகுத்தி வருகிறது என காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி கூறினார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில், செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி கூறியதாவது:-

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலுக்கும் தனித்தனி கலாச்சாரம் உள்ளது. அதை மத்திய அரசான பாஜக, தேவையில்லாத திணிப்பை புகுத்தி வருகிறது. மதவாத துஷ்பிரயோகம் செய்கிறது.

நாடு முழுவதும், ஒரே முறையை பின்பற்ற வலியுறுத்தும் ஆர்.எஸ் எஸ் இன் கனவு பலிக்காது. பாஜக  உருவாக்கும் கலாச்சார சீரழிவை ஏற்று கொள்ள முடியாது.

தமிழகம், மணிப்பூர், மகராஸ்டிரா தனி தனி கலாச்சாரம், உணவு பழக்கவழக்கங்கள் உள்ளது. இது தான் இந்தியாவின் பலம். இந்தியாவுக்கு தனி எண்ணம் இருக்க்கிறது. அதை பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் நிறைவேற்றாமல் தடுக்கிறது.

தமிழகத்தில், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராக மக்கள் போராட வேண்டும். பாஜகவின் கொள்கைகள் முரண்பாடானவையாக இருக்கிறது. இதனால், மக்கள் கடும் சோதனைகளை அடைந்து வருகின்றனர்.

ஆர் எஸ் எஸ் எதிராக நாங்கள் இணைந்து செயல்படுவோம் என ராகுல் காந்தி பேட்டி நாங்கள் ஒன்று கூடி ஆர்எஸ்எஸ் அமைப்பை எதிர்ப்போம்

மத்தியில் உள்ள பாஜகவை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் போராட வேண்டும். இதற்காக அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரளவேண்டும். ஆனால், இந்த விஷயத்தில் தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு, பாஜகவை கண்டு பயப்படுகிறது. பாஜகவும், அதிமுகவை கட்டுப்படுத்துகிறது.

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் தனி சிறப்புகள் உள்ளன. இந்திய பல எண்ணங்களை கொண்ட மக்கள் வாழும் நாடு இந்தியா. இங்கு ஆர் எஸ் எஸ் சிந்தனையை மக்களிடம்  பிரதிபலிக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது. அதன்படி, தமிழகத்தையும் பாஜக தான் ஆளுகிறது.

PREV
click me!

Recommended Stories

விஜய்யை சீண்டாதீங்க.. பாஜகவினருக்கு டெல்லி கொடுத்த 'சைலண்ட்' வார்னிங்.. மாஸ்டர் பிளான்!
‘டோ ஷூட் நடத்தும் முதல்வரை வீட்டுக்கு அனுப்புவோம்…’ எம்.ஜி.ஆர் சமாதியில் இபிஎஸ் சபதம்