வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு கொசுக்கள் பெருகியுள்ளது! தா.பாண்டியன் குற்றச்சாட்டு!

First Published Oct 31, 2017, 12:57 PM IST
Highlights
Tha. Pandiyan Condemned


தமிழகத்தில் சாக்கடைகள் பெருகி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு கொசுக்கள் பெருகியுள்ளதாக இந்திய கம்யூனிஸ் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

தா. பாண்டியன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, பண மதிப்பு நீக்கத்தின் மூலம் கறுப்பு பணமும், தீவிரவாதமும் ஒழிந்து விடும் என்று சொன்னார்கள்.   அவர்கள் சொன்னது நடந்ததா என்றால் இல்லை என்றார்.

தமிழகத்தல் சாக்கடைகள் பெருகி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய அளவுக்கு கொசுக்கள் பெருகியுள்ளன என்ற அவர், நமது நாட்டால் சீனாவை எதிர்க்க முடிகிறது. ஆனால், கொசுவை அழிக்க முடியவில்லை என்றார்.

விண்கலன் அனுப்ப முடிகிறது; அணுகுண்டு தயாரிக்க முடிகிறது, ஆனால் கொசுக்களை முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை. ஆட்சியாளர்களுக்குத் தங்களது கடமைகளைச் செய்ய முடியவில்லை என்றும் அவர் குற்றம் கூறினார். சர்க்கரையின் விலை உயர்த்தப்பட்டுள்ளது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை என்றும் கூறினார்.

மத்தியில் ஆள்பவர்கள் என்ன சொன்னாலும் செய்கிற அரசாக, தமிழக அரசு உள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார். நடிகர் கமல் ஹாசன், மக்களுக்காகப் பேசினால் அதனை வரவேற்போம் என்றும் அவர் அரசியலுக்கு வருவது குறித்து குழப்பமாகவே பேசி வருகிறார் என்றும் தா.பாண்டியன் கருத்து தெரிவித்தார்.

click me!