தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட தா.பாண்டியன் கைது! 

Asianet News Tamil  
Published : Oct 03, 2017, 12:14 PM ISTUpdated : Sep 19, 2018, 01:15 AM IST
தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட தா.பாண்டியன் கைது! 

சுருக்கம்

tha. pandiyan arrest

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் இன்று சென்னையில் கைது செய்யப்பட்டார். போராட்டத்தின்போது,  டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்தாமல் ஆட்சியை தக்க வைக்கவே தமிழக அரசு காலத்தை வீணடிப்பதாகவும் தா.பாண்டியன் குற்றம் சாட்டினார்.

தமிழக அரசைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின்போது பேசிய தா.பாண்டியன், டெங்கு காய்ச்சல், மலேரியா காய்ச்சலை கட்டுப்படுத்தாமல், தமிழக அரசு ஆட்சியைத் தக்க வைக்கவே காலத்தை வீணடிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

தமிழக மக்களின் எண்ணத்துக்கு எதிராக அதிமுக ஆட்சி செயல்படுகிறது. இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்றும் என்றும் தா.பாண்டியன் கூறினார்.

முன்னதாக, தா. பாண்டியன் நடத்தும் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலையில், போலீசாரின் தடையையும் மீறி இந்த போராட்டம் நடத்தப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் தா.பாண்டியன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

அந்த பெண் ஏன் புதருக்குப் பின்னால் போகணும்..? திமுக எஸ்.வி.சேகரின் திமிர் பேச்சு..!
எம்.ஜி.ஆர் அரசுக்கு வந்த கடும் நெருக்கடி.! நீதி கேட்டு நெடும் பயணம் சென்ற கலைஞர்.! வரலாற்றை திருப்பி போட்ட திமுகவின் போராட்ட வரலாறு.!