காரைக்குடியில் மு.க.அழகிரி - ஹெச். ராஜா சந்திப்பு!

 
Published : Oct 03, 2017, 11:46 AM ISTUpdated : Sep 19, 2018, 01:15 AM IST
காரைக்குடியில் மு.க.அழகிரி - ஹெச். ராஜா சந்திப்பு!

சுருக்கம்

H. Raja meet M.K. Azhagiri

பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜாவை, மு.க. அழகிரி இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, ராஜாவின் தந்தை மறைவுக்கு மு.க. அழகிரி இரங்கல் தெரிவித்தார்.

பாஜகவின் தேசிய செயலாளரான ஹெச். ராஜாவின் தந்தை ஹரிஹரன், உடல்நலக் குறைவு காரணமாக இரு தினங்களுக்கு முன்பாக காலமானார். அவருக்கு வயது 89.

ஹரிஹரன் உடலுக்கு அமைச்சர்கள், பாஜக பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். ஹரிஹரனின் உடல் அவரது சொந்த ஊரான காரைக்குடிக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன.

ஹெச். ராஜாவுக்கு தமிழக மற்றும் தேசிய அரசியல் தலைவர்கள் நேரிலும், தொலைபேசியிலும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், மு.க. அழகிரி காரைக்குடிக்கு சென்றார். அங்கு ஹெச். ராஜாவை சந்தித்த அவர், அவரின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!