குடி மகன்களுக்கு பயங்கர அதிர்ச்சி.. விர்ர்ர்ரென உயர்ந்தது சரக்குகள் விலை..

Published : Mar 07, 2022, 10:47 AM IST
குடி மகன்களுக்கு பயங்கர அதிர்ச்சி.. விர்ர்ர்ரென உயர்ந்தது சரக்குகள் விலை..

சுருக்கம்

கடந்த 5ஆம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மதுவிலக்கு ஆயத்தீர்வை வரி மற்றும் விற்பனை வரியை உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டு நிலையில் மதுபானம் விலை உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் சரக்கு விலை 10 முதல் 80 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி சரக்கு விலை உயர்ந்துள்ளது. ஏற்கனவே இது அறிவிக்கப்பட்ட ஒன்று என்றாலும் விலை உயர்வு குடிமகன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுபானம் 10 முதல் 80 ரூபாய் வரை உயர்வு காரணமாக நாள் ஒன்றுக்கு 10.35 கோடி வருவாய் கிடைக்கும் என்றும் ஆண்டு ஒன்றுக்கு 4396 கோடி ரூபாய்  வருவாய் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஆவின் பொருட்கள் விலை உயர்வை தொடர்ந்து இன்று முதல் டாஸ்மாக் விலை அதிகரித்திருப்பது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக அரசு பொறுப்பேற்று 9 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை அரசியல் ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருகிறது வருகிறது. அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது.

அதேநேரத்தில் சட்டம்-ஒழுங்கு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பது போன்ற விமர்சனங்களும் அரசுக்கு எதிராக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஆட்சியாளர்கள் பெற்ற கடன் தொகை  தமிழக அரசை பெரும் நெருக்கடியில் தள்ளியுள்ளது. பெற்ற கடனுக்கு வட்டி செலுத்த வேண்டிய நிர்பந்தத்தில் அரசு சிக்கி உள்ளதால் மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மாநில அரசுக்கான வருவாயை ஈட்டுவதற்கான பல்வேறு உத்திகளை அரசு முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தில் பால் தவிர அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்தப்பட்டுள்ளது. தயிர் நெய் பாலை வைத்து செய்யப்படும் இனிப்பு பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. 

இது அரசின் மீது கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்தான் டாஸ்மாக்கின் மதுபானங்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மூலம் மதுபானங்கள் சில்லரையாகவும், மொத்தமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. கொரோனா காரணமாக அதன் நேரம் மாற்றியமைக்கப்பட்டது ஆனால் தற்போது மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளது.

 

இந்நிலையில் விரைவில் தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளதால் மாநிலத்திற்கு அதிக நிதி தேவைப்படுகிறது. இதனால் மதுபானங்களின் விற்பனை விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. கடந்த 5ஆம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மதுவிலக்கு ஆயத்தீர்வை வரி மற்றும் விற்பனை வரியை உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டு நிலையில் மதுபானம் விலை உயர்ந்துள்ளது. அதாவது சாதாரண ரக  குவாட்டர் ஒன்றுக்கு பத்து ரூபாயும் உயர் ரக மதுபானத்திற்கு 20 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண ரக ஆப் பாட்டிலுக்கு 20 ரூபாயும், மீடியம் மற்றும் உயர் ரக மது பானங்களுக்கு 40 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண ரக ஃபுல் பாட்டிலுக்கு 40 ரூபாயும் உயர்ரக ஃபுல்லுக்கு 80 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல பீர் பாட்டிலுக்கு 10 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. புதிய விலைப்பட்டியல்  இன்று காலை 8 மணி முதல் ஒவ்வொரு டாஸ்மார்க் கடை மேற்பார்வையிடும் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை இன்று பகல் 12 மணி அளவில் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை ஏற்றம் குடிமகன்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!