போலீஸ் மெத்தன போக்கால் பறிபோன உயிர்.. மேலூர் சிறுமி தாயாரின் பரபரப்பு புகார் கடிதத்தை வெளியிட்ட எச்.ராஜா.!

By vinoth kumarFirst Published Mar 7, 2022, 6:53 AM IST
Highlights

காவல்துறையினர் அவர்களை தேடிக் கொண்டிருந்தபோது, மார்ச் 3-ம் தேதி நாகூர் ஹனிபாவின் தாயார் சிறுமியை உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் அழைத்து வந்து சிறுமியின் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார்.

மேலூர் சிறுமியின் தாயார் தன் மைனர் மகள் காணவில்லை என மேலூர் காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார் செய்தும் காவல்துறையின் மெத்தனத்தால் அச்சிறுமி இறந்துள்ளார் என  எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். 

மதுரை மாவட்டத்தில் மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டி  கிராமத்தை சேர்ந்த பழனியப்பன் -சபரி தம்பதியினரின் 17 வயது மகள் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.    இவர் கடந்த 14 ம் தேதியன்று திடீரென்று காணாமல் போயிருக்கிறார். இதனையடுத்து, பெற்றோல் பல்வேறு இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, மகளை காணவில்லை என்று தாயார் மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

மேலும், வழக்கு எதுவும் பதிவு செய்ய வேண்டாம் என்றும் வழக்குப் பதிவு செய்தால் தன்னுடைய மகளின் விவரம் பத்திரிக்கையில் வந்துவிடும் என கருதி மட்டும் மனு ரசீது மட்டும் போட்டு தருமாறு தாய் கேட்டுள்ளார். அதன்படியே போலீசார் ரசீது கொடுக்காமல் இந்த வழக்கை விசாரித்து வந்துள்ளனர். வழக்கின் விசாரணையில் காணாமல் போன பெண் அதே கிராமத்தைச் சேர்ந்த சுல்தான் என்பவரின் மகன் நாகூர் ஹனிபா என்பவரை காதலித்ததாகவும் அவருடன் சென்றிருப்பது தெரியவந்தது. 

கடந்த 14ம் தேதி மாணவி அழைத்துக் கொண்டு சென்ற நாகூர் அனிபா மதுரையில் உள்ள தனது நண்பர் பெருமாள் கிருஷ்ணன் என்பவரது வீட்டில் தங்கியிருக்கிறார் அதன் பின்னர் அங்கிருந்து ஈரோடு மாவட்டத்தில் பள்ளிபாளையத்தில் உள்ள தனது சித்தப்பா இப்ராஹிம் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார் என்றும்  கூறப்படுகிறது. இந்நிலையில், காவல்துறையினர் அவர்களை தேடிக் கொண்டிருந்தபோது, மார்ச் 3-ம் தேதி நாகூர் ஹனிபாவின் தாயார் சிறுமியை உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் அழைத்து வந்து சிறுமியின் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார்.\

இதையடுத்து அச்சிறுமியை மேலூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளனர். அடுத்ததாக மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். சிறுமியின் உடல் நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக எச்.ராஜா கூறுகையில் காவல்துறையின் மெத்தனபோக்கே சிறுமி உயிரிழப்புக்கு காரணம் என எச்.ராஜா கூறியுள்ளார். 

இதுதொடர்பாக பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- மேலூர் சிறுமியின் தாயார் தன் மைனர் மகள் காணவில்லை என மேலூர் காவல் நிலைய ஆய்வாளர் சார்லசிடம் 15/2/22 ல்  புகார் செய்தும் காவல்துறையின் மெத்தனத்தால் இன்று அச்சிறுமி இறந்துள்ளார். 

இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. செயல்படாத காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் .  இந்த மோசமான செயலை கண்டித்தும், அச்சிறுமிக்கு நியாயம் கேட்டும் போராடும் மக்களுக்கு எதிராக தடியடி நடத்தும் காவல் துறையின் அத்துமீறிய ஒருதலை பட்சமான செயலை வன்மையாக கண்டிக்கிறேன் என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

click me!