அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்று கொண்டிருந்த நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த ஓ.பன்னீர் செல்வத்தின் பேனர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக தலைமை நிர்வாகிகள் கூட்டம்
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கடந்த வாரம் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ்க்கு எதிராக அதிமுகவினர் முழக்கங்களை எழுப்பியதாலும், அவருக்கு அவ மரியாதை செய்ததாலும் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே ஓபிஎஸ் வெளியேறினார். இதனையடுத்து அதிமுக பொதுக்குழு கூட்டம் சட்டத்திற்கு புறம்பாக நடைபெற்றதாக ஓபிஎஸ் தெரிவித்தார். இதனையடுத்து பல்வேறு மாவட்டங்களில் ஓபிஎஸ் பேனரை அதிமுகவினர் மறைத்தனர். அவரது படத்தை வெள்ளை பூசியும் அளித்தனர். இதற்க்கு போட்டியாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இபிஎஸ் படத்தையும் கிழித்தனர். இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் இன்று அதிமுக அலுவலகத்தில் தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தில் 74 தலைமைக்கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்துகொண்டனர்.
ஓபிஎஸ் பேனர் கிழிக்கப்பட்டதால் பதற்றம்
இந்த கூட்டத்தில் பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பொதுக்குழு கூட்டத்தில் நிறவேற்றப்பட உள்ள தீர்மானங்கள், பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பவுது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெளியே இபிஎஸ் ஆதரவாளர்கள், ஓபிஎஸ் ஒழிக என கோஷமிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் வைக்கப்பட்ட ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரது புகைப்படங்களை கொண்ட பேனரில் , ஓபிஎஸ் புகைப்படத்தை இபிஎஸ் ஆதரவாளர்கள் கிழித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது. இந்தநிலையில் அதிமுக அலுவலக வாயிலில் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் கட்டிடத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
இதையும் படியுங்கள்
பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்..?அடுத்த அதிர்ச்சி கொடுக்க தயாராகும் இபிஎஸ் அணி