DMK : அதிமுகவில் இருந்து ஓ. பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டுவதாக கருதி கொண்டிருக்கிறார்கள். ஒரு ஜனநாயக அநீதியை அரங்கேற்றி இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி இடைச்சறுக்கலாக வந்தவர்.
சிவசேனா கட்சி
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வரும் நிலையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி வகித்து வருகிறார். சமீப காலமாக சிவசேனா எம்.எல்.ஏவும் சட்டசபை தலைவருமான ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவுக்கு எதிராக சிவசேனா எம்.எல்.ஏக்களை தன்னுடன் சேர்த்து வருகிறார்.
இந்த ஏக்நாத் ஷிண்டே மற்றும் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அசாமில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி ஆட்சி கவிழும் ஆபத்து எழுந்துள்ளது. இந்த விவாகரதிற்கு பின்னால் பாஜக இருக்கிறது என்று குற்றஞ்சாட்டுகிறார்கள் சிவசேனா கட்சி நிர்வாகிகள்.
இதையும் படிங்க : இரட்டை இலையை எவனுக்கும் விட்டுத் தர மாட்டோம்..களத்தில் குதித்த மாயத்தேவர் பாசறை.. யார் இந்த மாயத்தேவர்?
நாஞ்சில் சம்பத்
திருவள்ளூர் மாவட்ட திமுக பூந்தமல்லி தொகுதி இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை பூந்தமல்லியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘அதிமுகவில் இருந்து ஓ. பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டுவதாக கருதி கொண்டிருக்கிறார்கள். ஒரு ஜனநாயக அநீதியை அரங்கேற்றி இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி இடைச்சறுக்கலாக வந்தவர்.
பாஜக Vs திமுக
ஐகோர்ட்டு தீர்ப்பு கண்டுகொள்ளப்படவில்லை என்பதைவிட அதன் மீது அத்துமீறலை நடத்தி இருக்கிறார்கள். இதற்கு பின்னால் பாஜக விளையாட்டு இருக்கிறது என்பதை நாடு புரிந்து கொண்டிருக்கிறது. இன்று மராட்டியத்தில் செய்கிற வேலையை நாளை தமிழகத்தில் அவர்கள் செய்வார்கள். செல்வாக்கு உள்ள கட்சியை உடைப்பதும், உருக்குலைப்பதும், ஊடுருவுவதும் பாஜகவின் கொள்கை ஆகும். தற்போது அதற்கு அதிமுகவும் பலியாகி உள்ளது’ என்று கூறினார்.
இதையும் படிங்க : தேமுதிக தலைவர் ஆகிறாரா விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் ? வெளியான அதிர்ச்சி தகவல் !
இதையும் படிங்க : AIADMK : ஒற்றை தலைமைக்கு 'ஓகே' சொன்ன சசிகலா.. அடுத்து எடப்பாடியா? பன்னீரா? உச்சகட்ட பரபரப்பு