வரலாறுகள் மறைக்கப்படுகிறது , தமிழகத்தில் எதிர் பிரச்சாரம்...!! வேதனையில் வெடித்த ஆளுனர் தமிழிசை...!!

By Ezhilarasan BabuFirst Published Feb 28, 2020, 2:29 PM IST
Highlights

தவறான தகவல் தொடர்புகளால் தமிழகத்திலும் வரலாறு தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளது .  அதாவது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ராஜேந்திர சோழனின் பெருமை நாட்டின் எல்லை கடந்து பரவியுள்ளது. 
 

தமிழகத்தின் வரலாறு மறைக்கப்பட்டு தவறுதலாக திரிக்கப்படுகிறது என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் வேதனை தெரிவித்துள்ளார் .  தேச பாதுகாப்புக்கான விழிப்புணர்வு அமைப்பு மற்றும் புதுவை பல்கலைக்கழகம் சார்பில் மூன்று நாள் கருத்தரங்கு புதுவையில் தொடங்கியது . இம் மாநாட்டில் தென்கிழக்கு ஆசிய நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். இக்கருத்தரங்கை தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். 

அப்போது பேசிய அவர் இந்தியாவுக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் பழங்காலந்தொட்டே வர்த்தக கலாச்சார உறவு இருந்துள்ளது . ஆனால் வரலாறு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது .  இது ஒவ்வொன்றையும் மீட்டுருவாக்கம் செய்வது அவசியமாகும் .  தவறான தகவல் தொடர்புகளால் தமிழகத்திலும் வரலாறு தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளது .  அதாவது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ராஜேந்திர சோழனின் பெருமை நாட்டின் எல்லை கடந்து பரவியுள்ளது.  

அதனால் தான் தற்போதைய அரசு மகாராஷ்டிர துறைமுகத்திற்கு ராஜேந்திரசோழன் பெயரை சூட்டியுள்ளது .  தமிழகத்தை பொறுத்தவரையில் எதிர்ப்பு பிரச்சார மிக அதிகமாக உள்ளது .  சில சக்திகள் நமது வரலாற்றை மறைத்து உள்ளன .  அதை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டியது நமது கடமை ,  தமிழகத்தின் மகளாகிய நான் தெலுங்கானாவில் கவர்னராக உள்ளேன் அதற்காக பெருமை கொள்கிறேன் இவ்வாறு தமிழிசை பேசினார். 

 

click me!