பேருந்து பயணிகளுக்கு பயங்கர அதிர்ச்சி...!! கட்டணத்தை பன் மடங்கு உயர்த்தி அரசு அறிவிப்பு...!!

By Ezhilarasan BabuFirst Published Feb 28, 2020, 2:11 PM IST
Highlights

கோட்டங்களில் இருந்தும் சுமார் 500 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது இதைத்தொடர்ந்து தற்போது பேருந்து கட்டணம் 5 முதல் 10 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது .  அதாவது 191 ரூபாய் என இருந்த பேருந்து கட்டணம்  196 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது

கர்நாடக மாநிலத்தில் பேருந்து கட்டணம் உயர்ந்துள்ளதால் அம் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும்  பேருந்துகளின் கட்டணம் உயர்ந்துள்ளது .  மத்திய அரசு கொண்டுவந்துள்ள  ஜிஎஸ்டி உள்ளிட்ட வரி விதிப்பால்  ஏற்கனவே மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமல்லாது சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது .  இதனால் மத்திய மாநில அரசுகளின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.  இந்நிலையில் கர்நாடகாவில் கர்நாடகா அரசு பேருந்து கட்டணத்தை 12% உயர்த்தி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

கர்நாடகாவை பொருத்தவரையில்  சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது . இந்நிலையில்  பேருந்து காட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது இதன் காரணமாக தமிழகத்திற்கு வரும் கர்நாடகா பேருந்துகளின் கட்டணமும் உயர்ந்துள்ளது .  கர்நாடகாவில் 4 போக்குவரத்து கழகங்கள் செயல்பட்டு வருகிறது ,  கர்நாடக சாலை போக்குவரத்து கழகம் ,  வடக்கு கர்நாடக சாலை போக்குவரத்து  கழகம் ,  அதேபோல் வடமேற்கு கர்நாடக சாலை போக்குவரத்து கழகம்,  வடகிழக்கு கர்நாடக சாலை போக்குவரத்து கழகம் ,  பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் என நான்கு மண்டலங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது .  தற்போது இங்கு பேருந்து கட்டணம் 12 சதவீதமாக உயர்ந்துள்ளது .  தமிழகத்தை பொறுத்த வரை நாள்தோறும் சுமார் 400 க்கும் மேற்பட்ட பேருந்துகள் கர்நாடக மாநிலத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது.

 

அதேபோல் சேலம் மாநகரத்திலிருந்து  நாள்தோறும் 90 பேருந்துகள் பெங்களூர் உள்ளிட்ட  பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது .  அதேபோல் சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு  கோட்டங்களில் இருந்தும் சுமார் 500 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது இதைத்தொடர்ந்து தற்போது பேருந்து கட்டணம் 5 முதல் 10 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது .  அதாவது 191 ரூபாய் என இருந்த பேருந்து கட்டணம்  196 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது .  அதேபோல் நான்ஸ்டாப்  ஏசி  பேருந்துகளுக்கு 10 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது . தமிழகத்தில் இருந்து பயணம் செய்யும் பயணிகள் மத்தியில் இந்த பேருந்து கட்டணம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது அதேபோல் தமிழகத்தில் இருந்து செல்லும் பேருந்துகளின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது . 

click me!