நன்றி மறந்தாரா இயக்குநர் பா.ரஞ்சித்..? ஆத்திரத்தில் ரஜினி ரசிகர்கள்..!

By Thiraviaraj RMFirst Published Feb 28, 2020, 1:30 PM IST
Highlights

யாரும் யாரையும் நம்பிப் பிறக்கவில்லை. அவரவரின் தனித்தனி முயற்சி அவரவர்களுக்கான அடையாளத்தைத் தரும் என இயக்குநர் பா.ரஞ்சித் பேசியுள்ளது ரஜினி ரசிகர்களை அதிருப்தியாக்கி இருக்கிறது. 
 

யாரும் யாரையும் நம்பிப் பிறக்கவில்லை. அவரவரின் தனித்தனி முயற்சி அவரவர்களுக்கான அடையாளத்தைத் தரும் என இயக்குநர் பா.ரஞ்சித் பேசியுள்ளது ரஜினி ரசிகர்களை அதிருப்தியாக்கி இருக்கிறது.

 

நறுவி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடபெற்றது.  இவ்விழாவில்  இயக்குநர்கள் பா.ரஞ்சித், அதியன் ஆதிரை மற்றும் நடிகர் லிஜீஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள். அப்போது பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், ’’நறுவி படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தின் இயக்குநர் போல தான் நானும் அட்டக்கத்தி விழாவில் பதற்றமாக இருந்தேன். நறுவி படம் பெறும் வெற்றி மூலமாக இங்குள்ளவர்கள் எல்லாம் ஸ்ட்ராங்கான ஆட்களாக மாறுவார்கள் என்று நம்புகிறேன்.

ஒரு படத்தை எடுப்பதை விட வெளியிடுவது தான் ரொம்ப கஷ்டம். அந்தத் தடைகளை எல்லாம் தாண்டி இந்தப்படம் வெற்றியடையணும். இசை அமைப்பாளர் கிறிஸ்டிக்கு இந்தப்படம் நல்ல வாய்ப்பாக இருக்கும். இங்கு யாரும் யாரையும் நம்பிப் பிறக்கவில்லை. அவரவரின் தனித்தனி முயற்சி அவரவர்களுக்கான அடையாளத்தைத் தரும்.  இந்தப்படத்தில் உள்ள விஷுவல்ஸ் எல்லாம் நல்லாருக்கு. தகுதியான படத்தை தமிழ்சினிமா ரசிகர்கள் கை விடுவதே இல்லை. ஊடகமும் நல்ல படத்தைக் கொண்டாடியே தீருவார்கள். இந்த படம் பெரிதாக வெற்றிபெற வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்தார். 

இவரது பேச்சு ரஜினி ரசிகர்களை அதிருப்தியாக்கி இருக்கிறது. ‘’தலைவர் ரஜினி இல்லாமல் பா.ரஞ்சித் இந்த உயரத்தை அடைந்திருக்க முடியாது. காலா, கபாலி என அடுத்தடுத்த படங்களை இயக்க பா.ரஞ்சித்துக்கு ரஜினி வாய்ப்புக் கொடுத்தார். ரஜினியை வைத்து தனது சாதிய கருத்துக்களை பா.ரஞ்சித் முன் வைத்தார். அதன் பிறகே தலித்களின் குரல் என பா.ரஞ்சித் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார். ரஜினியை வைத்து பெயரையும், புகழையும் பெற்று விட்டு தற்போது அந்த நன்றியை மறந்து யாரையும் நம்பி பிறக்கவில்லை. அவரவரின் தனித்தனி முயற்சி அவரவர்களுக்கான அடையாளத்தை தரும் என பேசியிருக்கிறார். ரஜினி மட்டும் வாய்ப்புக் கொடுக்காமல் போயிருந்தால் இந்த அடையாளம் ரஞ்சித்துக்கு கிடைத்திருக்குமா? என கேள்வி எழுப்புகின்றனர். 

click me!