தேர்தல் நிதியை அள்ளி குவித்த பாஜக...!! வசூல் செய்த தொகை மொத்தம் எவ்வளவு தெரியுமா..??

By Ezhilarasan BabuFirst Published Feb 28, 2020, 1:44 PM IST
Highlights

2017 -2018ஆம்  ஆண்டில் பாஜக நன்கொடையாக சுமார்  437 .04 கோடி வசூலித்திருப்பது   தெரியவந்துள்ளது . அதே போல் கடந்த 2018-2019 ஆம் ஆண்டில் 4480 பேரிடம்  742 கோடி ரூபாய் நிதி   திரட்டியுள்ளதும் தெரியவந்துள்ளது.  
 

கடந்த 2018 மட்டும் 2019 ஆம் ஆண்டில் தேர்தல் நிதியாக மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி சுமார் 724 கோடியை நிதியாக திரட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .  அதேபோல் கடந்த 2017 மட்டும் 2018 ஆம் ஆண்டில் சுமார் 437.04 கோடி நிதி பெற்றுள்ளதாக  தெரிவித்துள்ளது .  நாட்டிலுள்ள பல்வேறு முக்கிய அரசியல் கட்சியினர் எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ அப்போதெல்லாம் தேர்தல் நிதியாக தொண்டர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மற்றும்  முக்கிய நிர்வாகிகளிடம் நிதி வசூலிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். 

அந்த வகையில் சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமாக பெறப்பட்ட நன்கொடை  குறித்து தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியினர் அறிக்கை தாக்கல் செய்வது வழக்கம் .  அந்தவகையில் தாக்கல் செய்த  ஆவணங்களின் அடிப்படையில் அசோஷியேஷன் பார் டெமாக்ரடிக் ரீபார்ம்ஸ் என்ற தன்னார்வ அமைப்பு அந்த அறிக்கைகளில் உள்ள தகவலாக திரட்டி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது ,  அதில் எந்தெந்த கட்சி எவ்வளவு நிதி வசூல் செய்துள்ளது ,  அதில் யாருக்கு எவ்வளவு கிடைத்துள்ளது என்ற புள்ளி விவரத்தையும் அதும் வெளியிட்டுள்ளது .  2017 -2018ஆம்  ஆண்டில் பாஜக நன்கொடையாக சுமார்  437 .04 கோடி வசூலித்திருப்பது   தெரியவந்துள்ளது . அதே போல் கடந்த 2018-2019 ஆம் ஆண்டில் 4480 பேரிடம்  742 கோடி ரூபாய் நிதி   திரட்டியுள்ளதும் தெரியவந்துள்ளது.  இது  மொத்த  தேசிய கட்சிகளுக்கும்  நன்கொடையாகக்  கிடைத்த ரூபாய் 951 கோடியில் ஐந்தில் ,நான்கு பங்கு ஆகும் ,  முந்தைய நிதியாண்டில் 26 கோடி மட்டுமே நன்கொடையாக திரட்டிய காங்கிரஸ் கட்சி 605 பேரிடமிருந்து  ரூபாய் 148 கோடி நிதி திரட்டி உள்ளது . 

அதேபோல்தான் டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ள எலக்டோரல் டிரஸ்ட் அமைப்பின் மூலம் மட்டும் பாரதிய ஜனதா ,  காங்கிரஸ் , திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு மொத்தம் 455 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2018 -19 ஆம் நிதியாண்டில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான தொகையை நன்கொடையாக பெறவில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் ஆணையத்தில் தெரிவித்துள்ளது இந்த ஒரே தகவலை அக்கட்சி கடந்த 13 ஆண்டுகளாக தேர்தல் ஆணையத்தில் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது .

click me!