
ஆசிரியர்களின் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் டிசம்பர் 2011 ஆண்டு நியமிக்கப்பட்ட 3200 ஆசிரியர்களில் 500 சிறப்பு பிரிவு ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுதினால் மட்டுமே பணி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
அரசின் இத்தகையை வரைமுறையை தளர்த்த வேண்டும் எனவும், 2010 ஆண்டிற்கு பிறகு அரசு மற்றும் அரசு சார் பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ஆசிரியர்களின் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.
மேலும், கல்வித்துறையை பொறுத்தவரை தமிழக அரசு வெளிப்படை தன்மையுடன் செயல்படுகிறது எனவும், ஆய்வக உதவியாளர்கள் தேர்வில் சிறு குறைபாடு கூட இல்லை எனவும் குறிப்பிட்டார்.
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் எனவும், செங்கோட்டையன் தெரிவித்தார்.