
மத்திய அரசை எந்த அமைச்சர்களும் விமர்சிக்க வேண்டாம் என முதலமைச்சர் பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு கட்ட அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கத்தியின் விளிம்பில் நிற்பது போல காட்சியளிக்கிறார்.
ஆட்சியை விட்டுவிட கூடாது என்ற முனைப்போடு செயல்பட்டு வரும் எடப்பாடியை எப்படியாவது கவிழ்த்து விட வேண்டும் என்று திட்டம் தீட்டி வருகின்றனர்.
போததகுறைக்கு அவர் தரப்பில் இருக்கும் அமைச்சர்களே அவருடைய காலை வார நேரம் பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.
ஏற்கனவே தினகரன் தரப்பில் 3 அமைச்சர்கள் எடப்படிக்கு எதிராக வேலை பார்த்து வருகின்றனர். தற்போது எடப்பாடியை கவிழ்க்க எம்.எல்.ஏக்கள் செந்தில் பாலாஜியும், தோப்பு வெங்கடாசலமும் கைகோர்த்துள்ளனர்.
இத்தகைய களேபர சூழ்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு இணையாக பல திட்டங்களை தீட்டி தான் பார்கிறார் எடப்பாடி. ஆனால் இது எவ்வளவு நாளைக்கு தாக்கு பிடிக்கும் எனபதை தான் அவராலயே உணர முடியவில்லை.
இந்நிலையில், மத்திய அரசை எந்த அமைச்சர்களும் விமர்சிக்க வேண்டாம் என முதலமைச்சர் பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
இன்று முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் மூன்றாவது அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது, மத்திய அரசை எந்த அமைச்சர்களும் விமர்சிக்க வேண்டாம் எனவும், ஊடகங்கள், பொதுக்கூட்டங்களில் கூட விமர்சிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், மத்திய அரசுடன் மாநில அரசுக்கு இணக்கமான சூழல் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.