குடிமகன்களின் குடும்பத்தாருக்கு அதிர்ச்சி... தீபாவளிக்கு மது விற்பனை... டாஸ்மாக் அதிரடி முடிவு..!

By Thiraviaraj RMFirst Published Nov 1, 2021, 1:04 PM IST
Highlights

வேலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், மாநிலத்தின் தென் பகுதிகளிலும் கணிசமான விற்பனையை எதிர்பார்க்கிறோம்

மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் இந்த வாரம் தீபாவளிக்கு முந்தைய 5 நாட்களில் 1,000 கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளி திருநாள் வியாழன் அன்று வருகிறது, அதைத் தொடர்ந்து நீட்டிக்கப்பட்ட வார இறுதி நாட்களிலும் விடுமுறை வருகிறது. தீபாவளியன்று 200 கோடிக்கும், அடுத்த நாளில் 250 கோடிக்கும் விற்பனையாகும் என டாஸ்மாக் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நவம்பர் 3 மற்றும் 7 க்கு இடையில் கூட்டு விற்பனை சுமார் 1000 கோடியாக இருக்கும்.

கடந்த ஆண்டு தீபாவளி மற்றும் பண்டிகை நாட்களில் டாஸ்மாக் நிறுவனம் 465 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது. "2020 ஆம் ஆண்டில், கோவிட்-19 காரணமாக வருவாய் குறைந்துவிட்டது. ஆனால், இந்த ஆண்டு தீபாவளியைத் தொடர்ந்து வார இறுதி நாட்கள் நீட்டிக்கப்படுகின்றன. மேலும் வேலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், மாநிலத்தின் தென் பகுதிகளிலும் கணிசமான விற்பனையை எதிர்பார்க்கிறோம்" என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:- திடீர் மூச்சுத்திணறல்.. கே.பாலகிருஷ்ணன் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.. முன்மாதிரியாக திகழும் தோழர்கள்.!

தொற்றுநோய் காரணமாக கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில், சென்னையில் 284 மதுக்கடைகளுடன் இணைக்கப்பட்ட 272 பார்கள் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பார்களை நடத்தி வரும் ஒப்பந்ததாரர்களுக்கான ஒப்பந்தத்தை இந்த ஆண்டு டிசம்பர் வரை நீட்டித்து அரசுக்குச் சொந்தமான மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:- பாஜகவின் கூட்டணி எப்போதும் அதிமுகவோடுதான்... தெறிக்கவிடும் அண்ணாமலை..!

இதுகுறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு அளித்த அறிக்கையில், டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் எல்.சுப்பிரமணியன் கூறுகையில், ’’அப்பகுதியில் உணவுப்பொருட்கள் விற்கவும், காலி பாட்டில்களை சேகரிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே ஒப்பந்தத்தை நீட்டிக்க அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் டாஸ்மாக் வாரியம் அனுமதி அளித்துள்ளது. டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் டிசம்பர் 31 அல்லது புதிய டெண்டரை இறுதி செய்யும் தேதி வரை, எது முந்தையதோ அது வரை ஒப்பந்தத்தை நீட்டிக்க மாவட்ட மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:- வீர வசனம் பேசிவிட்டு நீங்களே இப்படி செய்யலாமா? டிடிவி கேட்ட ஒரே கேள்வி.. திக்குமுக்காடிய திமுக..! 

உத்தியோகபூர்வ ஆதாரங்களின்படி, கடந்த 6 மாதங்களாக மூடப்பட்ட மதுக்கடைகள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்:- 8 ஆண்டுகளாக ஒன்றாக வசிக்கும் ஓரினச் சேர்க்கை தம்பதி... கணவன் -மனைவியாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

பார்களின் நுழைவு வாயில்களில் வாடிக்கையாளர்களின் விவரங்கள் சேகரித்து வைக்கப்படும். இதற்காக தனியாக குறிப்பேடும் இன்று முதல் பராமரிக்கப்பட உள்ளது. பார்களுக்கு உள்ளே வரும் அனைவருக்கும் வெப்ப அளவீட்டு சோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுவார்கள்.  முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். கொரோனா அறிகுறி தென்படும் நபர்கள் பார்களில் அனுமதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பார்களில் உள்ள பணியாளர்கள் அனைவரும் கைகளில் கையுறை அணிந்து பணியில் ஈடுபட வேண்டும். மேலும், 55 வயதுக்கு மேற்பட்ட நபர்களை பணியில் ஈடுபடுத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

tags
click me!