எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இரட்டை தலைமையிலான அதிமுகவில் இருந்தாலும் கூட சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை கொண்டவர். இதுவரை சசிகலா தொடர்பாக எந்த ஒரு விமர்சனத்தையும் இவர் முன்வைத்ததில்லை. இதனால் இவரை தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க கட்சி தலைமை தடை விதித்தது. இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து சசிகலாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அன்வர் ராஜா பேசிய ஆடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட அதிமுகவில் எம்.ஜி.ஆர். காலம் முதல் மூத்த அரசியல்வாதியாக இருந்து வருபவர் அன்வர் ராஜா. முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.பியான இவர், தற்போது அதிமுகவில் சிறுபான்மை பிரிவு மாநிலச் செயலாளராக இருந்து வருகிறார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்லம் பிரிந்து தர்மயுத்தம் நடத்தியபோது, சசிகலா பக்கம் இருந்தவர், பிறகு சசிகலா சிறைக்கு போன பிறகு எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக மாறினார்.
இதையும் படிங்க;- மாமியாரை மடக்கிய மருமகன்.. உல்லாசத்துக்கு கட்டாயப்படுத்தியதால் கொலை.. விதவையான 9 மாத கர்ப்பிணி மகள்.!
பிறகு இருவரும் சேர்ந்த ஒருங்கிணைந்த அதிமுகவில் மூத்த தலைவராக இருந்து வருகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இரட்டை தலைமையிலான அதிமுகவில் இருந்தாலும் கூட சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை கொண்டவர். இதுவரை சசிகலா தொடர்பாக எந்த ஒரு விமர்சனத்தையும் இவர் முன்வைத்ததில்லை. இதனால் இவரை தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க கட்சி தலைமை தடை விதித்தது. இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து சசிகலாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். மேலும், சசிகலா விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் கூறிய கருத்துக்கும் அவர் ஆதரவு தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க;- பெரும் ஆதரவு.. அதிமுகவில் மீண்டும் என்ட்ரி கொடுக்கப்போகும் சசிகலா? அதிர்ச்சியில் இபிஎஸ்..!
இதையும் படிங்க;- ஓபிஎஸ்-ஐ தொடர்ந்து அவரது மகன் ஜெயபிரதீப் போட்ட பதிவால் அதிமுகவில் சலசலப்பு..!
ராமநாதபுரம் முன்னாள் எம்.பி.அன்வர்ராஜா பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எல்லோரும் மரியாதை செலுத்த வரும்போது வரவில்லை. அவர்கள் சென்ற பிறகு தனது ஆதரவாளர்களுடன் தனியாக வந்து மரியாதை செலுத்தினர். அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் போது;- தற்போது சசிகலா அதிமுகவில் நுழைவது தொடர்பான பிரச்சனை எழுந்துள்ளதால் பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. அந்த கருத்து வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதிமுக கொடியை நாங்கள் மட்டுமல்ல அவர்களும் பிடிக்கலாம். யாரும் பிடிக்கலாம். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து என சசிகலாவுக்கு ஆதரவாக பேசினார்.
இந்நிலையில், புதுக்கோட்டையை சேர்ந்த அதிமுக தொண்டர் ஒருவரும், அன்வர் ராஜாவும் பேசிய ஆடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த வாட்ஸ்அப் குரூப்களில் உங்களை (அன்வர் ராஜாவை) மிரட்ட சொல்லி பதிவு போடுகின்றனர். சாதி, மதம் கடந்து சின்னம்மா (சசிகலா) தலைமையில் ஒற்றுமையாக அனைவரும் இருக்க வேண்டும். ஒற்றுமையாக இருந்திருந்தால் ஆட்சியை பிடித்திருக்கலாம் என்கிறார். இதற்கு பதிலளிக்கும் அன்வர்ராஜா, ‘‘அப்படி ஆட்சியை பிடித்திருந்தால் எடப்பாடி தன்னை புரட்சித்தலைவர் என்றல்லவா சொல்லியிருப்பார் என கூறியுள்ளார். அடுத்தடுத்து அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி எதிராக குரல் கொடுத்து வருவது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.