எதிர் கட்சியா இருந்த போது என்னென்ன பேசுனீங்க.. திமுகவின் இரட்டை வேடம்.. ஸ்டாலினை பிரிச்சு மேய்ந்த ஓபிஎஸ்.

Published : Nov 01, 2021, 01:00 PM ISTUpdated : Nov 01, 2021, 06:37 PM IST
எதிர் கட்சியா இருந்த போது என்னென்ன பேசுனீங்க.. திமுகவின் இரட்டை வேடம்.. ஸ்டாலினை பிரிச்சு மேய்ந்த ஓபிஎஸ்.

சுருக்கம்

ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு நிலைமை மாறிவிட்டது, காவிரி டெல்டா மண்டலத்திற்கு உட்பட்ட நாகப்பட்டினம் மண்டலத்தில் பெட்ரோகெமிக்கல் மண்டலத்தை உருவாக்குவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பொருட்டு 50 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி அறிக்கை MSM trade and investment promotion bureau என்ற அமைப்பினால் வெளியிடப்பட்டிருக்கிறது. 

பெட்ரோகெமிக்கல் மண்டலத்தை உருவாக்க திமுக அரசு நடவடிக்கை எடுத்திருப்பது திமுகவின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது என்றும், காவிரி டெல்டா பகுதியில் பெட்ரோகெமிக்கல் மண்டலம் உருவாக்க முயற்சியை அரசு கைவிட வேண்டும் என்றும், எதிர்க்கட்சி துணைத் தலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை  பின்வருமாறு:-

காவிரி டெல்டா மண்டலத்துக்கு உட்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆண்டுக்கு 9 மில்லியன் டன் சுத்திகரிப்பு திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கும் பணியினை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் மேற்கொண்டு வருவதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வண்ணம் அப்பகுதியில் பெட்ரோகெமிக்கல் மண்டலத்தை உருவாக்க திமுக அரசு நடவடிக்கை எடுத்திருப்பது திமுகவின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டு காண்பிப்பதாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டும் தமிழ்நாட்டில் உணவு பாதுகாப்பினை கருத்தில் கொண்டும் காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் சில பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றும் வகையில் 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மேம்படுத்துதல் சட்டம் இயற்றப்பட்டது.

இதையும் படியுங்கள்: வன்னியர் இட ஒதுக்கீட்டை மீட்டெடுக்க ஸ்டாலினால்தான் முடியும்.. மொத்தமாக சரண்டரான தைலாபுரம் டாக்டர்

20-2-2020 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மேம்படுத்துதல் சட்ட முன்வடிவு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நடைபெற்ற விவாதத்தில் பேசிய தற்போதைய முதலமைச்சர் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் பிரிவு 4 (2) பி-யின் கீழ்  உட்கட்டமைப்பு திட்டங்களான துறைமுகம், குழாய்கள், சாலை, தொலைத்தொடர்பு, எரிசக்தி, குடிநீர் வழங்கல் மற்றும் இதர பயன்பாட்டுக்கான திட்டங்களை இந்த சட்டம் கட்டுப்படுத்தாது என்றும் கூறப்படுகிறது. இதில் other utilities என்பதற்கு பெட்ரோல் கேஸ் எல்லாம் வராது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று வினவினார். இந்த சட்ட முன்வடிவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தினார்.

அப்போதைய சட்ட மன்ற உறுப்பினர் தற்போதைய தொழில் துறை அமைச்சர் அவர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று ஆயில் மற்றும் எரிவாயு இருக்கக்கூடிய derivatives இருக்கிறதே petrochemical,அது மிக முக்கியமான ஒன்று, வருங்காலங்களில் ஏதோ ஒரு மல்டி நேஷன் கம்பெனியும் அல்லது இந்தியாவில் இருக்கக்கூடிய ரிலையன்ஸ் போன்ற ஒரு பெரிய நிறுவனம் நான் அந்த மண்டலத்தில் பெட்ரோகெமிக்கல் காம்ப்ளக்ஸ் கொண்டு வருகிறேன் அல்லது கெமிக்கல் ஃபேக்டரி கொண்டு வருகிறேன் அல்லது பார்மாடிக்கல் இன்டஸ்ட்ரி  கொண்டு வருகிறேன் என்று சொன்னால் நான் அந்த இடத்திற்கு தான் வருகிறேன் அந்த இடத்தில் வேறு பலவிதமான இன்டஸ்ட்ரீஸ் வருகின்றன என்று சொன்னால் நீங்கள் tenneries  நாள் பொல்யூஷன் வருகிறது என்று சொல்கிறீர்கள் ஆனால் இங்கே கொடுக்கப்பட்டு இருக்கின்ற பல்வேறு தொழிற்சாலையை விட மிக அதிகமான அளவு பொசிஷனை உருவாக்கக்கூடிய வேளாண் மண்டலத்தை பாதிக்கக்கூடிய petrochemical fertilisers அதுபோல வேறு பல கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் அங்கு வருவதை எந்த வகையில் இந்த சட்டம் தடுக்கவிருக்கிறது என்று வினவி இருக்கிறார்.

ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு நிலைமை மாறிவிட்டது, காவிரி டெல்டா மண்டலத்திற்கு உட்பட்ட நாகப்பட்டினம் மண்டலத்தில் பெட்ரோகெமிக்கல் மண்டலத்தை உருவாக்குவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பொருட்டு 50 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி அறிக்கை MSM trade and investment promotion bureau என்ற அமைப்பினால் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எந்த தொழிலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோ அந்த தொழிலுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் அரசாக திமுக அரசு மாறிவிட்டது. இது குறித்து தொடர்புடைய மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் தடைசெய்யப்பட்ட பட்டியலில் பெட்ரோல் கெமிக்கல் இல்லை என்று பதில் அளித்ததாக பத்திரிகை செய்தி வந்துள்ளது. 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மேம்படுத்துதல் சட்டம் பிரிவு 22 இரண்டில் இரண்டாவது அட்டவணையில் உள்ள தொழிற்சாலைகளை நீக்கவோ அல்லது சேர்க்கவும் வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது.

இதையும் படியுங்கள்: ஓபிஎஸ் தலைமையில் திடீர் ஆலோசனை... அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு.. 5 மாவட்டங்களில் முக்கிய முடிவு.

சட்டத்தில் இடம் இல்லை என்றால் அதற்கான விதிகளை சேர்க்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்து காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்க வேண்டும் என்றும் சட்டத்தில் உள்ள ஓட்டை பயன்படுத்தி வேளாண் தொழிலை சீரழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்பதும் தான் விவசாயிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடும் இதுதான். மக்களுக்காக சட்டமே தவிர சட்டத்திற்காக மக்கள் அல்ல என்பதை கருத்தில் கொண்டு காவிரி டெல்டா பகுதியில் பெட்ரோகெமிக்கல் மண்டலம் உருவாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

ஓ.பி.எஸ்- டிடிவி.தினகரனுக்கு அமித் ஷா போடும் முட்டுக்கட்டை..! தவெகவுக்கு செக் வைக்கும் அமமுக..!
திமுக மீது தவெகவின் திடீர் கரிசனம்.. டெல்லியில் நடந்த மனமாற்றம்..! அடியோடு மாறிய நிர்வாகிகள்..!