
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் அரசாணை சட்டத்திற்கு முரணானது என தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை, தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.அதேபோல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இது பாமக உள்ளிட்ட கட்சிகள் மத்தியில் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை கலையும் பேராயுதமாக இருந்து வருகிறது இட ஒதுக்கீடு,
சமூகத்தில் ஒவ்வொரு தரப்பு மக்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட சமநீதி நிலைநாட்டுவதே சமூகநீதி ஆக இருந்து வருகிறது. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், எஸ்சி- எஸ்டி என பட்டியலின பிரிவினருக்கு என மொத்தம் 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதில் மிகவும் பிற்படுத்தப்பட்ட எம்பிசி பிரிவினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. இந்நிலையில் அந்த எம்.பி.சி பிரிவில் உள்ள வன்னியர்களுக்கு மட்டும் தற்போது 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: 40 வருஷ அரசியலில் விழுந்த இடி.. துடி துடிக்கும் ராமதாஸ்.. விட மாட்டோம் என கதறிய பாமக பாலு..
அதிமுக கூட்டணியில் இருந்துவந்த பாமாகா வன்னியர்களுக்கு 15 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலை பயன்படுத்திக்கொண்ட பாமக கூட்டணியை காரணம் காட்டி இட ஒதுக்கீடு வழங்கிய தீரவேண்டும் என அரசுக்கு நிர்பந்தம் கொடுத்து வந்தது. அதனடிப்படையில் சட்டமன்ற தேர்தலுக்குநெருக்கத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி கடந்த அதிமுக அரசு மசோதா நிறைவேற்றியது.
இது பாமகவின் 40 ஆண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று அப்போது அக்கட்சியின் சார்பாக அறிவிப்பு செய்யப்பட்டது பின்னர் அதைத் தொடர்ந்து வந்த திமுக தன் பங்குக்கு அதற்கான அரசாணை வெளியிட்டது. வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டா? உடனே அதை ரத்து செய்ய வேண்டும், அந்த ஒரு சமூகத்திற்கு மட்டும் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது சரியல்ல என எம்.பி.சி பிரிவில் உள்ள இதர சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதையும் படியுங்கள்: எதிர் கட்சியா இருந்த போது என்னென்ன பேசுனீங்க.. திமுகவின் இரட்டை வேடம்.. ஸ்டாலினை பிரிச்சு மேய்ந்த ஓபிஎஸ்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த பாலமுரளி என்பவர், இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் சேர்த்து மொத்தம் 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வன்னியர் சமூகத்திற்கு மட்டும் உள் ஒதுக்கீடு வழங்கி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக அரசு மசோதாவை நிறைவேற்றியது, இதனால் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் உள்ள இதற சமுதாயத்தை சேர்ந்த மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, எதிர்காலம் அனைத்தும் கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது.
ஆனால் முறையான சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்னரே இதை வழங்கப்பட வேண்டும், எனவே வன்னிய சமூகத்திற்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியிருப்பதை ரத்து செய்ய வேண்டும் அதேபோல இந்த சட்டத்தை அமல்படுத்த கல்விநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளில் பொதுக்குழு செய்யப்படுவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பான மனு மீதான விசாரணை நடைபெற்று வந்தது, இந்நிலையில் இந்த வழக்குகளை நீதிபதிகள் எம்.துரைசாமி கே. முரளி சங்கர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்த நிலையில் இன்று இந்த வழக்கில் அதிரடி தீர்ப்பு வெளியாக உள்ளது. வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் அரசாணை சட்டத்திற்கு முரணானது என தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இது பாமக உள்ளிட்ட வன்னிய அமைப்புகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.