பயங்கர ஆச்சர்யம்.. இதுல மட்டும் 35 கோடியா.. பிளான் போட்டு தட்டி தூக்கிய முதல்வர் ஸ்டாலின்.

By Ezhilarasan BabuFirst Published Nov 1, 2021, 11:35 AM IST
Highlights

அதேபோல் ஆவின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை இனிப்பு வழங்கும் போதும் அரசுத்துறை  சார்ந்த அலுவலக கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் இனிப்புகள் வழங்கப்படும் போது ஆவின் இனிப்பு வகைகளை கொள்முதல் செய்து வழங்க வேண்டுமென முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளனர் 

இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு ஆவின்  இனிப்பு வகைகள் அமோக விற்பனை நடைபெற்று வருவதாக அந்நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட இனிப்புகள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். திமுக தலைமையில் ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு மக்கள் நல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அரசு துறைகளில் பல்வேறு அதிரடி மாற்றங்கள், நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அரசுக்கு வருமானத்தை ஈட்டித்தரும் துறைகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டு அதை மேலும் விரிவுபடுத்த முயற்சிகளை அரசு முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த ஆட்சியில் அதிக ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஆவின் துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது.

இதையும் படியுங்கள்: எதிர் கட்சியா இருந்த போது என்னென்ன பேசுனீங்க.. திமுகவின் இரட்டை வேடம்.. ஸ்டாலினை பிரிச்சு மேய்ந்த ஓபிஎஸ்.

இந்நிலையில் ஆவின் துறையில் விற்பனையை அதிகரிக்க புதிய வகை இனிப்புகள் தீபாவளிக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்த தகவலை பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையை முதல்முறையாக ஆவின் பால் பாக்கெட்டுகளிலேயே இனிப்புகள் குறித்த விவரங்கள் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக  அரசின் ஆவின்  நிறுவனத்தில் தயிர், வெண்ணெய், நெய்,  பால் பவுடர், பால்கோவா, மைசூர்பாக்,  ஐஸ்கிரீம் முதலான பால் உபயோகபடுத்தி  இனிப்புகள் தயாரிக்கப்பட்டு ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இனிப்புவகைகள் புதிது புதிதாக தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, காஜுகத்லி, காஜு பிஸ்தா ரோல், தட்டி மில்க் கேக், மோத்தி பாக், காபி பிளேவர்டு மில்க் பர்பி உள்ளிட்ட புதிய வகை இனிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை துவங்கப்பட்டு அமோகமாக நடைப்பெற்று வருகிறது.

அதேபோல் ஆவின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை இனிப்பு வழங்கும் போதும் அரசுத்துறை  சார்ந்த அலுவலக கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் இனிப்புகள் வழங்கப்படும் போது ஆவின் இனிப்பு வகைகளை கொள்முதல் செய்து வழங்க வேண்டுமென முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளனர் அந்த வகையில் சென்னையில் மட்டும் ஆவின் இனிப்புகள் இதுவரை 34 கோடி அளவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கடந்த ஆண்டு 25 கோடி அளவில் மட்டுமே விற்பனை நடைபெற்ற நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்கள் உள்ள நிலையில் கடந்த ஆண்டை விட வருவாய் பன்மடங்கு கூடுதலாக ஈடுபட்டுள்ளதாகவும் ஆவின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: தமிழக மக்களுக்கு பயங்கர எச்சரிக்கை.. அடுத்த 4 நாட்களுக்கு குறிப்பா இந்த மாவட்ட மக்கள் எச்சரிக்கையா இருங்க.

பல வண்ண கவர்களில், பல அளவுகளில் விற்பனையாகி வரும் ஆவின் பால் பாக்கெட்டுகளிலேயே ஆவின் தயாரிப்பு இனிப்புகள் குறித்த விளம்பரம் அச்சிடப்பட்டு அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையிலும், விற்பனையை அதிகரிக்கும் வகையிலும் ஆவின் நிர்வாகம் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளதோடு, அரசிற்கான வருவாய் அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
 

tags
click me!