நிதிஷ்குமார் கட்சி போல அதிமுக பலவீனமடையும்... சாபம் விட்ட தமிமுன் அன்சாரி..!

Published : Nov 22, 2020, 09:08 PM IST
நிதிஷ்குமார் கட்சி போல அதிமுக பலவீனமடையும்... சாபம் விட்ட தமிமுன் அன்சாரி..!

சுருக்கம்

பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிதிஷ்குமார் கட்சி இன்று பலவீனமாகிவிட்டது. அதைபோல் அதிமுகவும் ஆகக்கூடும் என்று மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.   

மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்காக அதிமுக தொண்டர்கள்தான் கவலைப்பட வேண்டும். நாங்கள் கவலைப்பட ஒன்றுமில்லை. தமிழக மக்களின் மனநிலைக்கு எதிராக அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. தங்கள் கொள்கைப் பங்காளியாக திகழ்ந்த சிவசேனாவுக்கே மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க இடையூறு செய்தவர்கள் பாஜகவினர் என்பதை அதிமுக நினைவில் கொள்ள வேண்டும்.


அதேபோல பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிதிஷ்குமார் கட்சி இன்று பலவீனமாகிவிட்டது. அதைபோல் அதிமுகவும் ஆகக்கூடும். சில மாதங்களுக்கு முன்பு வரை கழகங்கள் இல்லாத தமிழகம் என்று பாஜக முழங்கிவந்தது. ஆனால், இப்போது அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது.” என்று தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!