ரஜினிகாந்த் மீது கடும் கோபத்தில் டெல்லி திரும்பிய அமித்ஷா..! 3வது அணி அமையாத வருத்தத்தில் பாஜக நிர்வாகிகள்..!

Published : Nov 22, 2020, 08:02 PM IST
ரஜினிகாந்த் மீது கடும் கோபத்தில் டெல்லி திரும்பிய அமித்ஷா..! 3வது அணி அமையாத வருத்தத்தில் பாஜக நிர்வாகிகள்..!

சுருக்கம்

சென்னை வந்த அமித்ஷாவுக்கு முன்னாள் அதிபர் டிரம்ப் இந்தியா வந்த போது மோடி கொடுத்த வரவேற்பில் இருந்து இன்னும் அவர் மீளவில்லை.அந்த அளவிற்கு முதலமைச்சர் பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும் கொடுத்த வரவேற்பில் அசந்து போனார் சென்னை வந்த அமித்ஷா. கலைவாணர் அரங்கில் நடந்த நலத்திட்ட விழாவில் பேசிய ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என்று பேசி  அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்கள்.  அமித்ஷாவும் அதிமுகவுடன் கூட்டணி என்பதை உறுதிப்படுத்தினார்.  

மூன்றாவது அணி அமைத்து முதல்வர் வேட்பாளராக பாஜக வேட்பாளரையே அறிவிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார் அமித்ஷா. ரஜினி கட்சி தொடங்கி பாஜகவுக்கு ஆதரவு தந்துவிட்டால், அதன்பின்னர் பாமக, தேமுதிக கட்சிகளையும் இணைத்து வலுவான 3வது அணியை அமைக்கலாம் என்று திட்டமிருந்தார். அதற்கான முயற்சிகள் போய்க்கொண்டிருந்தன. அதே நேரத்தில் அதிமுகவுடன் மீண்டும் இணைய வேண்டியது வந்தாலும் வரலாம் என்றுதான் அக்கட்சியை ஒரேயடியாக ஒதுக்கிவைக்கவில்லை. அதிமுக மீதான பாஜகவின் கனிவு இருந்துகொண்டே தான் இருந்தது.

3வது அணி அமைக்க பாஜக எடுத்துவரும் முயற்சியை அதிமுக தெரிந்துகொண்டதால்தான் அதிமுகவினரும் பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தனர்.சென்னை வந்திறங்கும் வரைக்கும் கூட ரஜினி தரப்பில் இருந்து ஏதாவது தகவல் வந்து சேரும் என்றே எதிர்பார்த்திருந்தார் அமித்ஷா. ரஜினி தரப்பில் இருந்து எந்த சிக்னலும் வராததால்தான் மூன்றாவது அணி கனவை மூடி வைத்துவிட்டு, மீண்டும் அதிமுகவுடன் இணக்கமாக போயிருக்கிறார் அமித்ஷா என்கிறார்கள் பாஜகவினர்.

நடிகர் ரஜினிகாந்த் அமித்ஷாவை சந்தித்து பேசுவார் அவரை வைத்து தமிழகத்தில் 3வது அணியை அமைக்கலாம் என்று ப்ளான் போட்டு வந்த அமித்ஷா கனவு பலிக்காமல் போனதால் ரஜினி மீது கடும் கோபத்தில் டெல்லி திரும்பியிருக்கிறார் அமித்ஷா என்கிறார்கள் பாஜக நிர்வாகிகள். குருமூர்த்தி அமித்ஷா சந்திப்பு நீண்ட நேர தமிழக அரசியல் குறித்த பேச்சுவார்த்தையில் ரஜினியை பற்றித்தான் நிறைய பேசியிருக்கிறார்கள்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?