அரசு விழாவை கொஞ்சம் கூட வெட்கமின்றி தேர்தல் கூட்டணி அறிவிப்பு மேடையாக்கிய அதிமுக.. போட்டு தாக்கும் முத்தரசன்.!

Published : Nov 22, 2020, 07:34 PM ISTUpdated : Nov 22, 2020, 07:38 PM IST
அரசு விழாவை கொஞ்சம் கூட வெட்கமின்றி தேர்தல் கூட்டணி அறிவிப்பு மேடையாக்கிய அதிமுக.. போட்டு தாக்கும் முத்தரசன்.!

சுருக்கம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வாஜ்பாய் ஆட்சியில் நடந்த தவறுகளை கண்டித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறி, அதிமுக இனி எந்தக் காலத்திலும் பாஜகவுடன் தேர்தல் கூட்டணி வைக்காது' என்று உறுதியளித்ததை எடப்பாடி பழனிசாமி காற்றில் பறக்க விட்டுவிட்டார் என முத்தரசன் விமர்சனம் செய்துள்ளார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வாஜ்பாய் ஆட்சியில் நடந்த தவறுகளை கண்டித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறி, 'அதிமுக இனி எந்தக் காலத்திலும் பாஜகவுடன் தேர்தல் கூட்டணி வைக்காது' என்று உறுதியளித்ததை எடப்பாடி பழனிசாமி காற்றில் பறக்க விட்டுவிட்டார் என முத்தரசன் விமர்சனம் செய்துள்ளார். 

இது தொடர்பாக, இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்ட அரசு நிகழ்வை பாஜக - அதிமுக தேர்தல் கூட்டணி அறிவிப்பு மேடையாக்கப்பட்டுள்ளது. அரசு விழாவில் அரசின் திட்டங்களை விளக்குவதும், சில சாதனைகளை எட்டியிருப்பதாகவும் கூறுவது மரபாகும்.
அரசின் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள், கட்சி எல்லைகளைத் தாண்டிய பொதுமக்கள் கலந்து கொண்ட நிகழ்வில் முதல்வரும், துணை முதல்வரும் போட்டிப் போட்டுக் கொண்டு பாஜகவின் விசுவாசிகள் என்பதை காட்டிக் கொண்டனர்.

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா, வாஜ்பாய் ஆட்சியில் நடந்த தவறுகளை கண்டித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறி, 'அதிமுக இனி எந்தக் காலத்திலும் பாஜகவுடன் தேர்தல் கூட்டணி வைக்காது' என்று உறுதியளித்ததை காற்றில் பறக்க விட்டு, அதிமுக வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என அறிவித்தனர்.

அரசு விழாவை, சிறிதும் வெட்கமின்றி தேர்தல் கூட்டணி அறிவிப்பு மேடையாக்கிய மலிவான செயலில் ஈடுபட்ட முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கும், இந்த மரபு மீறிய செயலைத் தடுக்கத் தவறிய தமிழ்நாடு அரசுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது என .முத்தரசன் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள் தானா? நிபந்தனையோடு இபிஎஸிடம் இறங்கி வந்த அமித் ஷா..!
பாஜகவை வைத்து தவெகவுக்கு ஸ்கெட்ச் போட்ட ஸ்டாலின்..! திமுகவை பேயடி அடித்த விஜய்..! சீக்ரெட் பின்னணி..!