
தமிழகம் விரைவில் காவி மயமாகும் என்றும், பாஜக ஆட்சியை கைப்பற்றும் என்றும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பாஜக மத்தியில் ஆட்சியமைத்து 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, சென்னையில் அமைந்தகரையில் சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது.
இதில், பங்கேற்றுப் பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இந்திய அளவில் கேரளா, தமிழகம், மேற்கு வங்கம் போன்ற ஒரு சில மாநிலங்கள் தவிர, பெரும்பாலான மாநிலங்களில் தற்போது பாஜக ஆளுங்கட்சியாக உள்ளது என தெரிவித்தார்.
மத்தியில் பாஜக ஆட்சி நடந்தாலும். தமிழகம் போன்ற மாநிலங்களிலும் தனது இருப்பை தக்க வைக்க பாஜக கடும் முயற்சிகளை எடுத்து வருவதாக தமிழிசை தெரிவித்தார்.
தமிழகத்தில் பாஜக புறவாசல் வழியாக ஆட்சியை கைப்பற்ற வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை என்றும். வலுவான கட்சியாக தமிழகத்தில் பாஜக வளர்ச்சியடையும என்றும் அவர் கூறினார்.
இந்தியா முழுவதும் காவி மயமாகி வருகிறது. பாஜக.,வின் பிடியில் இருந்து தமிழகம் தப்பிக்க முடியாது. விரைவில் தமிழகமும் காவி மயமாக மாறும். காவிகளை பிடிக்காது என்று கூறுவோர், நமது ஆட்சியில் செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும் எனவும் தமிழிசை தெரிவித்தார்.