Tamilnadu rain: தமிழக மக்களே உஷார்.. அடுத்த 4 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்..

By Ezhilarasan BabuFirst Published Dec 9, 2021, 4:24 PM IST
Highlights

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு. வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

வடகிழக்கு பருவ காற்றின் (easterly trough) காரணமாக 09.12.2021:  மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், 

10.12.2021:, தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட உள் மாவட்டங்களில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவும். 11.12.2021, தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 12.12.2021,13.12.2021: தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும்  பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு. வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு. வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும்.. அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): கும்பகோணம் (தஞ்சாவூர்) 3, சத்யபாமா பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்) தலா 2, மஞ்சளாறு (தஞ்சாவூர்), வலங்கைமான் (திருவாரூர்), தொண்டி (ராமநாதபுரம்) தீர்த்தாண்டதனம் (ராமநாதபுரம்), தென்பரநாடு (திருச்சி), புதுச்சேரி (புதுச்சேரி), கங்காவள்ளி (சேலம்) தலா 1.மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை இவ்வாறு வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

click me!