Maridhas: திமுகவை சீண்டிப் பேச்சு... மாரிதாஸை குண்டுகட்டாக தூக்கிய போலீஸ்..!

By Thiraviaraj RMFirst Published Dec 9, 2021, 3:57 PM IST
Highlights

சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ, ட்விட்டரில் பதிவிட்டதாக கூறி மதுரையில் யூடியூபர் மரியதாஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

காவல்துறை குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்து வெளியிட்ட யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்ததாக கூறி மாரிதாசை, மதுரை புதூர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து காவல்துறையினர் சற்று முன்னர் கைது செய்துள்ளனர். முதுகுளத்தூர் மணிகண்டன் இறந்த விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ, ட்விட்டரில் பதிவிட்டதாக கூறி மதுரையில் யூடியூபர் மரியதாஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கவனிக்க வேண்டிய முக்கிய விசயம் பட்டியலின மக்கள் குரலாக மீடியா பேசுவதாக யாரும் எண்ணிவிடக் கூடாது மீடியா பேச ஒரே காரணம் இந்து மதம் ஜாதி வெறி கொண்டது என ஒரு பிம்பத்தை சில அமைப்புகளுக்காகக் கட்டமைத்து பட்டியலின மக்களைத் தூண்டி விடுவது, ஜாதி மோதலை அணையாமல் பார்த்துக் கொள்வது மட்டுமே.

— Maridhas🇮🇳 (@MaridhasAnswers)

 

’’முதுகுளத்தூர் மணிகண்டன் இறந்த சம்பவம் நமக்குச் சொல்லும் செய்தி மூன்று சிலர் சொல்வது போல் சில சமூகம் மட்டும் அல்ல அனைத்து சமூகத்தினரும் இந்த விதமான காட்டுமிராண்டித் தனமான சில காவலரின் அதிகார புத்தியால் பாதிக்கப்படுகிறோம். ஆக காசு இல்லாதவன் இங்கே கேட்க நாதி இல்லாதவன்.

இரண்டாவது, இங்கே மீடியா தலித், சிறுபான்மையினர் பாதிப்பு என்றால் விவாதம் செய்யும். அதுவும் குற்றம் செய்தவன் திமுக இல்லை என்றால் மட்டும். தற்போது திமுக ஆட்சி, இறந்த மணிகண்டன் மேல் உள்ள இரண்டு பிரிவுகளில் வர மாட்டார். எனவே அவர் உயிருக்கு முக்கியத்துவம் இல்லை விவாதமும் இல்லை இதுவே திமுக மீடியா.

கவனிக்க வேண்டிய முக்கிய விசயம் பட்டியலின மக்கள் குரலாக மீடியா பேசுவதாக யாரும் எண்ணிவிடக் கூடாது. மீடியா பேச ஒரே காரணம் இந்து மதம் ஜாதி வெறி கொண்டது என ஒரு பிம்பத்தை சில அமைப்புகளுக்காகக் கட்டமைத்து பட்டியலின மக்களைத் தூண்டி விடுவது, ஜாதி மோதலை அணையாமல் பார்த்துக் கொள்வது மட்டுமே.

முதுகுளத்தூர் மாணவர் மணிகண்டன் இறந்த தகவல் அதிர்ச்சியாக உள்ளது. அதை விட அதிர்ச்சி மீடியா எந்த விவாதமும் இல்லாமல் கடந்து செல்வது. திமுகவிற்கு உற்ற துணையாக மீடியாக்கள் உள்ளன! எனவே எந்த குற்றமும் மறைக்கலாம் திமுக? முதல்வர் துறை ஆகப் பதிலளிப்பது அவர் பொறுப்பு’’ என அவர் ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். 

யூடியூபர் மரியதாஸை கைது செய்ய சென்றபோது அங்கு கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் கைது செய்ய விடாமல் தடுத்தனர். பின்னர் போலீசார் அவர்களை அப்புறப்படுத்திவிட்டு கைது செய்தனர். மாரிதாஸ் கைதை கண்டித்து மதுரை கே புதூர் காவல் நிலையம் முன்பு பாஜகவினர் சாலை மறியலில்னீடுபட்டனர்.

இதுகுறித்து பாஜகவினர், ‘’சட்ட விரோதமாக, அராஐகமாக, எந்தவித முகாந்திரமும் இன்றி, எந்த புகாருமின்றி மதுரை எழுத்தாளர் மாரிதாஸைகைது செய்து அழைத்துச் செல்ல, ஆளும் கட்சியின் தூண்டுதலின் பேரில், மதுரை அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் சூரக்குமார் அத்துமீறியுள்ளார். இந்த விவகாரத்தில் ஆளுனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறுகின்றனர்.

click me!