தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக் கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று, பதவியேற்று வருகின்றனர்.
undefined
சென்னை மாநகராட்சி மேயராக திமுக வேட்பாளர் பிரியா பதவி ஏற்றுக்கொண்டார். சென்னை மாநகராட்சி மேயராக திமுக வேட்பாளர் பிரியா போட்டியின்றி தேர்வாகியுள்ளார். பட்டியல் பிரிவைச் சேர்ந்த பெண் சென்னை மாநகராட்சி மேயராவது இதுவே முதல் முறையாகும்.
கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில், போட்டியின்றி ஒருமனதாக கல்பனா ஆனந்தகுமார் தேர்வு பெற்றார். மேலும் அவருக்கு வெற்றிச்சான்றிதழும் வழங்கப்பட்டது. அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா ஆகியோர் செங்கோல் அளித்தனர்.
காஞ்சிபுரம் மேயராக திமுகவின் மகாலட்சுமி யுவராஜ் பதவி ஏற்றுக்கொண்டார்.தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சியில் இழுபறி நீடித்த நிலையில் தற்போது அதிமுக ஆதரவு வேட்பாளர் ராமலெஷ்மி வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டி பேரூராட்சி, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சி ஆகிய இரண்டு பேரூராட்சிகளை அமமுக கைப்பற்றியுள்ளது. மதுரை திருமங்கலம் நகராட்சியில் தலைவர் தேர்தலில் பெரும்பாலான வார்டு உறுப்பினர்கள் புறக்கணித்ததால் மறுதேதி குறிப்பிடாமல் தலைவர்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடலூர் மேயர் பதவி தனது மனைவிக்கு கிடைக்காததால் மாவட்ட பொருளாளர் VSL குணசேகரன் தூக்க மாத்திரை சாப்பிட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார். தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சியில் உள்ள மொத்தம் 8 வார்டுகளில் திமுக மற்றும் அதிமுக 4க்கு 4 என்ற விகிதத்தில் சமபலத்தில் உள்ளது. இந்நிலையில் பேரூராட்சி தலைவர் தேர்தலை திமுக புறக்கணிப்பு காரணமாக தேர்தல் ஒத்திவைப்பு என தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அன்னவாசல் பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற திமுக - அதிமுக இடையே கடும் போட்டி என கூறப்படுகிறது. அன்னவாசல் பேரூராட்சி அலுவலகத்துக்குள் கல்வீசப்பட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.. மேலும், பேரூராட்சி அலுவலக வாசலில் வைக்கப்பட்ட பேரிகார்டுகளைக் கடந்து திமுகவினர் அலுவலகத்துக்குள் செல்ல திமுகவினர் முயற்சித்தனர்.
தேர்தலில் அதிமுகவினர் - திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டதால் இரு தரப்பு மோதலை தடுக்க போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டை அன்னவாசல் பேரூராட்சி தலைவர் பதவி தேர்தலில் அதிமுக சாலை பொன்னம்மாள் வெற்றி பெற்றுள்ளார்.
சுயேச்சை வேட்பாளர் விஜய கண்ணன் 18 வாக்குகள் பெற்று முன்னாள் அமைச்சர் தங்கமணி தொகுதியிலேயே, அதுமட்டுமில்லாமல் ஆளுங்கட்சி திமுகவுக்கும் அல்வா கொடுத்து ‘நகர்மன்ற தலைவர்’ ஆக பதவியேற்று இருக்கிறார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக ஆம்பூர் நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் ஷகிலா அறிவித்துள்ளார்.
தேர்தல் நடைபெற்ற வளாகத்தின் வெளியே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திமுகவை சேர்ந்த இரு தரப்பினர் வாக்குவாதம் செய்ததால் தேர்தல் ஒத்திக்கவைக்கப்பட்டுள்ளது. செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவராக மொக்தியார் மஸ்தான், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.