உயிரிழந்த மாணவரின் சவப்பெட்டிக்கு பதிலாக 8 பேரை அழைத்து வரலாம்.. விமானத்தில் இடமில்ல.. பாஜக MLA ஆணவப்பேச்சு.

Published : Mar 04, 2022, 12:59 PM IST
உயிரிழந்த மாணவரின் சவப்பெட்டிக்கு பதிலாக 8 பேரை அழைத்து வரலாம்.. விமானத்தில் இடமில்ல.. பாஜக MLA ஆணவப்பேச்சு.

சுருக்கம்

ஹூப்ளி பாஜக எம்எல்ஏ அரவிந்த் பெல்லாட் உயிரிழந்த மாணவரின் உடலை கொண்டுவர விமானத்தில் அதிக இடம் தேவைப்படும், அதற்கு பதிலாக அந்த இடத்தை 8 மாணவர்களுக்கு கொடுத்து அவர்களை தாயகம் மீட்டு வரலாம் என அவர் கூறினார். 

உயிரிழந்த மாணவரின் சவப்பெட்டிக்கு பதிலாக கிட்டத்தட்ட 8 முதல் 10 பேரை விமானத்தில் நாட்டுக்கு அழைத்து வரலாம் என கர்நாடக மாநில பாஜக எம்எல்ஏ கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் நவீன் சேகரப்பா உடல் விமானத்தில் கொண்டு வரப்பட உள்ள நிலையில், கர்நாடக மாநிலம் ஹூப்ளி பாஜக எம்எல்ஏ அரவிந்த் பெல்லாட் இவ்வாறு கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சு பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவருக்கு பலரும் கண்டம் தெரிவித்து வருகின்றனர். 

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஒரு வாரத்திற்பும் மேலாக பன்முனை தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக அந்நாட்டின் தலைநகர் கியுவ் மற்றும் கார்கிவ் உள்ளிட்ட 9க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்கள் ரஷ்யாவிடம் வீழ்ந்துள்ளது. பல முக்கிய கட்டிடங்களை குறிவைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் அந்நாட்டை விட்டு லட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளுக்குள் தஞ்சம் புகுந்து வருகின்றனர். லட்சக்கணக்கான இந்திய மாணவர்கள் அங்கு தங்கி பயின்று வரும் நிலையில், இந்த யுத்தத்தில் சிக்கி உயிருக்கு போராடி வருகின்றனர். குண்டு சத்தத்திற்கு இடையே ஆபத்தான நிலையில் அண்டை நாடுகளை நோக்கி மாணவர்கள் தப்பியோடி வருகின்றனர்.

இதே நேரத்தில் எல்லையில் தாங்கள் உக்ரைன் ஆதிகாரிகளால் தாக்கப்படுவதாகவும், அந்நாட்டு அதிகாரிகள் தங்களை வெளியேற அனுமதிக்க மருத்து வருவதாகவும் கண்ணீர் மல்க வீடோய் வெளியிட்டு  தகவல் தெரிவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வர மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.நாளுக்கு நாள் ரஷ்யாவின் தாக்கதல் அதிகரித்து வரும் நிலையில், உக்ரைன் பணியாவிட்டால் ரஷ்யா அணு ஆயுதத்தை பயன்படுத்த வேண்டி வரும் என எச்சரிக்கை விடுத்து வருகிறது. இதனால் அங்கு பதற்றம் அதிகரித்து வருகிறது.

இதே நேரத்தில் உக்ரைன் நாட்டின் எல்லையில் அமைந்துள்ள ஹங்கேரி ருமேனியா, போலந்து, மால்டோவா போன்ற நாடுகளிலுள்ள இந்திய தூதர்கள் இந்திய மாணவர்களை வரவேற்று இந்தியாவுக்கு பாதுகாப்பாக அனுப்பிவைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.அவ்வப்போது விமானங்கள் மூலம் மாணவர்கள் நாட்டிற்கு திரும்ப அழைத்து வரப்படுகின்றனர். இந்நிலையில்தான் கடந்த  மார்ச் மாதம் 1 ஆம் தேதி அன்று உக்ரைன் ரஷ்யா இடையான 6வது நாள் போரில் உக்ரைனில் மருத்துவம் பயின்று வந்த கர்நாடகவைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்ற இந்திய மாணவர் கொல்லப்பட்டார். கார்கி நகரில் இருந்து வெளியேறுவதற்காக ரயில் நிலையம் செல்லும்போது குண்டு வெடிப்பில் சிக்கி உயிரிழந்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. 

அவரின் உயிரிழப்பு ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இந்நிலையில் பாரதப் பிரதமர் மோடி சேகரப்பாவின் பெற்றோர்களிடம் தொலைபேசி வாயிலாக ஆறுதல் கூறினார். அப்போது மாணவரின் தந்தை தனது மகனின் உடலை வீட்டிற்குக் கொண்டுவர உதவுமாறு பிரதமர் மோடி மற்றும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோருடன் வேண்டுகோள் விடுத்தார். இன்னும் இரண்டு நாட்களுக்குள் அவரது உடல் வீட்டிற்கு கொண்டு வரப்படும் என அரசாங்கம் உறுதி அளித்தது. மாணவரின் உடல் எப்போது கொண்டு வரப்படும் என்ற எதிர்பார்ப்பில் பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில்தான் மாணவரின் உடலை கொண்டு வருவது பற்றிய கேள்விக்கு அம்மாநில பாஜக எம்எல்ஏ அளித்த பதில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

நவீனின் உடலை மீட்டு தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளார்களே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஹூப்ளி பாஜக எம்எல்ஏ அரவிந்த் பெல்லாட் உயிரிழந்த மாணவரின் உடலை கொண்டுவர விமானத்தில் அதிக இடம் தேவைப்படும், அதற்கு பதிலாக அந்த இடத்தை 8 மாணவர்களுக்கு கொடுத்து அவர்களை தாயகம் மீட்டு வரலாம் என அவர் கூறினார்.

மேலும் நவீனின் உடலை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, அங்கு போர் நடந்து கொண்டிருப்பதால் உயிரோடு இருப்பவர்களை அழைத்து வருவதே மிகவும் சிரமமாக இருக்கும் நிலையில், இறந்தவரின் உடலை கொண்டு வருவது  மிகவும் கடினமான பணி, மாணவரின் சவப்பெட்டிக்கு பதிலாக 8 முதல் 10 பேரை நாட்டிற்கு உயிருடன் அழைத்துவர முடியும் என்று மீண்டும் பெல்லாட் கூறினார்.

அவரின் இந்த பேச்சு பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பாஜக எம்எல்ஏவின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதை சாதித்து விட்டோம் எதையும் இதை சாதித்து விட்டோம் என்று கூறும் பாஜக இறந்த மாணவனின் உடலை கொண்டுவர ஒரு கூடுதல் விமானத்தை கூட இயக்க முடியாத நிலையில் உள்ளதா? விரைவில் இதற்கு மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். 
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!