இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சிறந்த கல்வி நிறுவனங்கள் உள்ளன... மு.க.ஸ்டாலின் பெருமிதம்!!

By Narendran S  |  First Published Aug 26, 2022, 8:30 PM IST

அனைத்து மக்களும் பயனடையும் வகையில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். 


அனைத்து மக்களும் பயனடையும் வகையில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக கொங்கு மண்டலத்திற்கு சென்றுள்ளார். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்த அவர், இன்று ஈரோட்டில் புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். ரூ.183.70 கோடி மதிப்பீட்டில் 1,761 புதிய திட்டப்பணிகள் மற்றும் ரூ. 261.57 கோடி மதிப்பில் 135 முடிவுற்ற பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதையும் படிங்க: திமுக அரசு இந்த விஷயத்தில் தோல்வியடைந்துவிட்டது... குஷ்பு பரபரப்பு குற்றச்சாட்டு!!

Tap to resize

Latest Videos

பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட ஈரோடு பாதாள சாக்கடை திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படுகிறது. ரூ.10 கோடியில் மஞ்சள் ஏற்றுமதி மையம் அமைக்கப்படும். மக்களை காக்கக்கூடிய அரசாக மட்டுமில்லாமல் மண்ணையும் காக்கக் கூடிய அரசாக தமிழ்நாடு அரசு உள்ளது.

இதையும் படிங்க: திமுகவை டேமேஜ் பண்ண அதிமுக வேண்டாம்... கே.என் நேரு போதும் .. திராவிட மாடலை கழுவி ஊற்றிய பாஜக நாராயணன்.

நெல் உற்பத்தியில் தமிழ்நாடு புதிய சாதனை படைத்துள்ளது. அனைத்து மக்களும் பயனடையும் வகையில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. நாட்டிலேயே தனிநபர் வருமானம் தமிழ்நாட்டில் தான் அதிகம். முதலமைச்சராக மட்டுமல்ல உங்களில் ஒருவனாக இருந்து செயல்பட்டு வருகிறேன். பெண் தொழில் முனைவோர் தமிழகத்தில் தான் அதிகம், இந்தியாவிலேயே சிறந்த கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில்தான் உள்ளன என்று தெரிவித்துள்ளார். 

click me!