புதிய தேசிய கல்விக் கொள்கை : தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.. மத்திய அமைச்சர் கொடுத்த அதிர்ச்சி!

By Raghupati RFirst Published Aug 27, 2022, 8:58 PM IST
Highlights

எதிர்க்கட்சியாக இருந்தபோது மட்டுமல்லாமல், ஆட்சிக்கு வந்த பிறகும் தொடர்ச்சியாக புதிய தேசிய கல்விக் கொள்கையை திமுக எதிர்த்துவருகிறது.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் புதிய தேசிய கல்விக் கொள்கையை திமுக எதிர்த்துவருகிறது. குறிப்பாக, இந்த கொள்கையில் இடம்பெற்றிருக்கும் மும்மொழிக்கொள்கை போன்ற அம்சங்களை திமுக கடுமையாக எதிர்க்கிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோது மட்டுமல்லாமல், ஆட்சிக்கு வந்த பிறகும் தொடர்ச்சியாக புதிய தேசிய கல்விக் கொள்கையை திமுக எதிர்த்துவருகிறது. 

கடந்த மே மாதம் இணையவழி கல்வி, புதிய தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக அனைத்து மாநிலங்களின் கல்விச் செயலாளர்களுடன் மத்திய அரசு ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. அதை, தமிழக அரசு புறக்கணித்தது.அந்தக் கூட்டத்தில் பங்கேற்க மாநிலங்களின் கல்வித்துறைச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், மாநில அரசின் கருத்துகள் மற்றும் பரிசீலனைகளைத் தெரிவிக்க, மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்களை அனுமதிக்க வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார். 

மேலும் செய்திகளுக்கு..கூட்டணி சேர்ந்த மோடி - ஸ்டாலின்.. திமுகவை இறங்கி அடிக்கும் ஹெச்.ராஜா - இது தெரியாம போச்சே!

அந்த கடிதத்துக்கு, மத்திய கல்வித்துறை அமைச்சகத்திடமிருந்து பதில் இல்லை. எனவே, கூட்டத்தைப் புறக்கணிப்பதாகத் தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் இன்று சென்னை கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்தார் மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுபாஷ் சர்கார். அப்போது பேசிய அவர், 'அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதன் மூலம்  தகுதிவாய்ந்த, திறமைமிக்க மாணவர்களை உருவாக்க முடியும். அதற்காகவே தேசிய கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானவில் தேசிய கல்விக்கொள்கை பற்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அனைத்து உயர் கல்வி உயர்கல்வி நிறுவனங்களிலும் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் தகுதிவாய்ந்த, திறமைமிக்க மாணவர்களை உருவாக்க முடியும். தமிழகத்தின் கல்வி தரம் நன்றாக உள்ளது. புதிய கல்விக்கொள்கை குறித்து தமிழக அரசு தனது கருத்தைத் தான் பதிவு செய்துள்ளதே தவிர எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

 இதுவரை தமிழக அரசு புதிய கல்வி கொள்கையை எழுத்துப்பூர்வமாக எதிர்க்கவில்லை. தமிழ்நாடு அரசு மாநிலத்திற்கான கல்விக் கொள்கையை வகுக்க குழு அமைத்துள்ளது. ஒவ்வொரு மாநிலமும் தங்களது பெருமையை வெளிப்படுத்திக் கொள்ளவே இது மாதிரியான குழுக்களை அமைத்து வருகின்றன. உயர்கல்வி பயில்வோருக்கான விகிதத்தில் 50% மேல் இருப்பதால் மட்டும் தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளக்குகிறது என சொல்லிவிட முடியாது. 

மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

தாய் மொழியை கற்க வேண்டும் என்றுதான் மத்திய அரசும் சொல்கிறது. தாய் மொழியையும் கற்றுக்கொள்வது போலவே, மற்ற மொழிகளுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என்றுதான் புதிய கல்வி கொள்கை கூறுகிறது.  எந்த மொழியையும் நாங்கள் திணிக்க மாட்டோம். தாய் மொழியை முதன்மைப்படுத்துவோம். அனைத்து மாநிலத்திலும் ஒரு கல்விக் கொள்கை உண்டு. 

எல்லா கல்விக்கொள்கையையும் ஆய்வு செய்து, எது தரமாக உள்ளது என்பதை நாம் பார்க்கவேண்டும். 3, 5 மற்றும் 8ஆம் வகுப்பு தேர்வுகள் பொதுத் தேர்வுகளாக வைக்கப்படுவதன் மூலம் மாணவர்களின் கல்வித்தரம் உயர்வானதாக இருக்கும். தமிழக அரசு புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கவில்லை என்பது, அவர்கள் அதை புரிந்துகொண்டுள்ளனர் என்பதையே காட்டுகிறது' என்று கூறினார்.

மேலும் செய்திகளுக்கு..“மக்களிடம் உண்மையாக இருங்க.. 8 வழிச்சாலை சரியான திட்டம் தான் !” முதல்வருக்கு அறிவுரை கூறிய அண்ணாமலை!

click me!