உள்ளாட்சி தேர்தல்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்… என்ன தெரியுமா..?

By manimegalai aFirst Published Sep 18, 2021, 7:59 PM IST
Highlights

ஊரக உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர்களை நியமித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

சென்னை:  ஊரக உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர்களை நியமித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

கள்ளக்குறிச்சி, நெல்லை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய 9 மாவட்டங்களில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கிறது.

இது தவிர 28 மாவட்டங்களில் காலியாக இருக்கும் உள்ளாட்சி பதவிகளுக்கும் அக்டோபர் மாதம் 9ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக போய் கொண்டு இருக்கிறது. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் உள்ளாட்சி தேர்தல் களப்பணியில் தீவிரமாக இறங்கி இருக்கின்றன.

இந் நிலையில் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களுக்கான தேர்தல் பார்வையாளர்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் பார்வையாளர்களின் விவரம் வருமாறு:

காஞ்சிபுரம்   - அமுதவல்லி

செங்கல்பட்டு  - சம்பத்

விழுப்புரம்  - பழனிசாமி

கள்ளக்குறிச்சி – விவேகானந்தன்

வேலூர்  - விஜயராஜ்குமார்

ராணிப்பேட்டை  - மதுமதி

திருப்பத்தூர்  - காமராஜ்

நெல்லை – ஜெயகாந்தன்

தென்காசி  - பொ. சங்கர்

9 மாவட்டங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பார்வையாளர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள மாவட்டங்களுக்கு வரும் 22ம் தேதி சென்று தேர்தல் கண்காணிப்பு பணிகளை தொடங்க உள்ளனர் என்றும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் அவர்களின் செல்பேசி எண்கள் விவரங்கள் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியரால் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறி இருக்கிறது.

click me!