சூடு பிடிக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல்… அமமுகவுக்கு கிடைத்தது குக்கர் சின்னம்

By manimegalai aFirst Published Sep 18, 2021, 7:39 PM IST
Highlights

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைத்துள்ளது.

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைத்துள்ளது.

நெல்லை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ம் தேதி நடத்தப்படுகிறது. வேட்புமனு தாக்கல் வரும் 15ம் தேதி தொடங்க உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் உள்ளாட்சி தேர்தல் களத்துக்கு தயாராகி வருகின்றன.

திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகள் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாரான நிலையில் அமமுகவின் நிலை என்ன என்பது பற்றி பல கேள்விகள் எழுந்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஊரக உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமமுக குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறது.

அக்கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கி தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. கட்சிக்கு குக்கர் சின்னம் கிடைத்துள்ளதால் அமமுகவினர் ஏக குஷியில் உள்ளனர். முன்னதாக தமிழக சட்டசபை தேர்தலிலும் அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

click me!