2.5 கோடி தடுப்பூசி… காங். காய்ச்சல் வந்துட்டதாம்… பிரதமர் மோடி மறைமுக கிண்டல்

Published : Sep 18, 2021, 07:15 PM IST
2.5 கோடி தடுப்பூசி… காங். காய்ச்சல் வந்துட்டதாம்…  பிரதமர் மோடி மறைமுக கிண்டல்

சுருக்கம்

இரண்டரை கோடி கொரோனா தடுப்பூசி ஒரே நாளில் போட்டதால் ஒரு கட்சிக்கு காய்ச்சல் வந்துவிட்டதாக பிரதமர் மோடி காங்கிரசை மறைமுகமாக கிண்டல் அடித்துள்ளார்.

டெல்லி: இரண்டரை கோடி கொரோனா தடுப்பூசி ஒரே நாளில் போட்டதால் ஒரு கட்சிக்கு காய்ச்சல் வந்துவிட்டதாக பிரதமர் மோடி காங்கிரசை மறைமுகமாக கிண்டல் அடித்துள்ளார்.

பிரதமர் மோடியின் பிறந்த நாளில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. கிட்டத்தட்ட நாடு முழுவதும் இரண்டரை கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந் நிலையில் சுகாதாரத்துறை ஊழியர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக உரையாடினார்.

அப்போது அவர் பேசியதாவது: நாட்டில் இரண்டரை கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது மறக்க முடியாத தருணம். ஊசி போட்டுக் கொண்டால் காய்ச்சல் வரும் மக்கள் சொல்லிய நிலையில் எனது பிறந்த நாளில் இரண்டரை கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதால் ஒரு அரசியல் கட்சிக்கு (அதாவது காங்கிரசுக்கு) காய்ச்சல் வந்துவிட்டது.

முனகள பணியாளர்கள், சுகாதாரத்துறையினர் உள்ளிட்ட அனைவரும் இணைந்து இந்த தடுப்பூசிகளை செலுத்தி உள்ளனர். நேற்று விநாடிக்கு 425 பேர் வீதம் என ஒரு மணி நேரத்தில் 15 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இது வேறு எந்த நாட்டிலும் படைக்காத சாதனை. அனைத்தும் உங்களின் முயற்சியால் சாத்தியமானது என்று கூறினார்.

PREV
click me!

Recommended Stories

அமித்ஷா ஆர்டர்.. இபிஎஸ் வீட்டுக்கு சென்ற நயினார்.. கூடுதல் சீட், ஓபிஎஸ்ஸை சேர்க்க நெருக்கடி?
நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!