
பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
பொன்னையன் பன்னீர் அணியிலேயே தொடர்ந்து இருப்பாரா? நாசா புகழ் நாஞ்சில்சம்பத் நாளை எந்தப் பக்கம் சாய்வார் எனும் அளவுக்கு தமிழக அரசியல் ஸ்திரத்தன்மை இழந்து படுதாளத்திற்குச் சென்றுள்ளது.
எப்போது என்ன நடக்குமோ என்ற பரபரப்பிலேயே மக்கள் உள்ளனர். இதற்கு தகுந்தாற்போல் செய்தித் தொலைக்காட்சிகளிலும் பல அணியினரின் பகீர் பேட்டிகளை தொடர்ந்து ஒளிபரப்பி உசுப்பேற்றி வருகிறது.
போயஸ் கார்டனில் இருக்கும் ரஜினியின் வீட்டிற்கு திருநாவுக்கரசர் செல்கிறார் என்று தகவல் வெளியானதும் மீடியாக்கள் குவியத் தொடங்கின. ஏறக்குறைய 1 மணி நேர இடைவெளிக்குப் பிறகு ரஜினியின் இல்லத்தில் இருந்து வெளியே வந்த திருநாவுக்கரசர், செப்டம்பர் 1 ஆம் தேதி தனது மகளுக்கு திருமணம் நடைபெறுவதாகவும், அதன் காரணமாக அழைப்பிதழ் அளிக்க வந்ததாகவும் தெரிவித்தார்.