
நடிகர் சத்யராஜ் விவகாரத்தில் கன்னட அமைப்புகளின் அணுகுமுறை தவறானது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
கடந்த 2008ஆம் ஆண்டு சத்யராஜ் காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ் திரைப்படக் கலைஞர்கள் சார்பாக கண்டன கூட்டம் நடைபெற்றது. இதில் விஜயகாந்த், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சத்யராஜ், “அங்கு வாட்டாள் நாகராஜ் என்கிற ஒரு பெரிய காமெடியன் இருக்கிறார். நல்லவேளை அவர் சினிமாவுக்கு வரவில்லை. வந்திருந்தால் வடிவேலுவை எல்லாம் மிஞ்சியிருப்பார்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், தமண்ணா, ராணா டகுபதி, அனுஷ்கா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பாகுபலி-2 வெளியாகவுள்ளது. இதனையடுத்து திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று வாட்டாள் நாகராஜ் கொந்தளிப்புடன் கூறியுள்ளார்.
இதற்கிடையில், நடிகர் சத்யராஜ் தனது பேச்சு யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
ஆனாலும், கன்னட அலுவாளி இயக்கத் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில், நடிகர் சத்யராஜ அவர்களின் உருவபொம்மை எரித்தனர்.
இந்நிலையில் கன்னட அமைப்புகளின் அணுகுமுறை தவறானது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து கூறியுள்ள அவர், ’இந்திய மக்கள் அனைவரும் சகோதரர்கள். சத்யராஜ் விஷயத்தில் கன்னட அமைப்புகளின் அணுகுமுறை தவறானது.
அவரது உருவ பொம்மையை எரிப்பது எல்லாம் கண்டனத்துக்குரியது. இம்மாதிரியான வன்முறைப் போராட்டங்களை கர்நாடக அரசு வேடிக்கைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது’ என தெரிவித்துள்ளார்.