
சசிகலாவால் ஜெயலலிதா அடித்தே கொலை செய்யப்பட்டதாக ஓ.பி.எஸ். ஆதரவாளர் பொன்னையர் குபீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலை எவராலும் நாடிபிடித்து பார்க்க முடியாதபடி அதிரடித் திருப்பங்கள் நித்தம் நித்தம் அரங்கேறி வருகின்றன. அந்த அணியை இவங்க கலாய்ப்பதும், இவங்களை அவங்க கலாய்ப்பதும் என மக்களுக்கு செம என்டர்டெயிண்மென்ட்
அம்மா இட்லி சாப்பிடறாங்க, எழுந்து நடக்கறாங்க, விரைவில் வீடு திரும்புவாங்க என மீடியாக்களுக்கு வெரிபைடு சோர்சாக திகழ்ந்து வந்த பொன்னையன் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களையும் தவிடுபொடியாக்கி மாஸ் காட்டியவர்.
என்ன மாயமோ என்ன மந்திரமோ தெரியவில்லை தற்போது ஓ.பி.எஸ். அணி பக்கம் தாவியதும் சசிகலாவை குற்றச்சாட்டுகளால் வாட்டி வதைத்து வருகிறார்.
இது தான் பேட்டி சீசனாச்சே… தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அவர் போகிற போக்கில் சீரியஸ் பேட்டி ஒன்றை தட்டிவிட, தவித்து வருகிறது தமிழகம்.
அவர் அளித்த பேட்டி உள்ளபடியே “அம்மா மயங்கிய நிலையிலேயே சென்றார். அப்படி மயங்கிய நிலைக்கு சென்றதற்கு காரணம், மருத்துவமனைக்கு சென்றதற்கு முன்னால் போயஸ் கார்டனில் ஸ்டாம்ப் பேப்பரில் கையெழுத்து போடச் சொல்லி, மறுத்த அம்மா தாக்கப்பட்ட காரணத்தால் அடிக்கப்பட்டு அதனால் மயங்கிய நிலையில் இருந்தார். தாக்கப்பட்டதன் விளைவு தான் அந்த கன்னத்திலே இருக்கின்ற அந்தக் காயங்கள்.
அம்மா தாக்கப்பட்டதை கண்ணிலே பார்த்த வேலை செய்த பணியாள் இன்றுவரை எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை” இவ்வாறாக முடிகிறது பொன்னையனின் பேட்டி…
அது வேற வாய் இது நாற வாய் மொமன்ட் தான் நினைவுக்கு வருகிறது.