எடப்பாடி கடிதத்தை தூக்கி எறிந்த திருப்பதி தேவாஸ்தானம்..? EX எம்.எல்.ஏ.வை அவமானப்படுத்தி வெளியேற்றம்.!

By vinoth kumarFirst Published Mar 1, 2020, 5:12 PM IST
Highlights

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக மதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்எல்ஏ சுந்தரராஜன் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிபாரிசு கடிதத்தை பெற்று வந்தார். அக்கடிதத்தை திருமலையில் உள்ள கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி அலுவலத்தில் வழங்கினார். ஆனால், அங்கிருந்த ஊழியர்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில முதல்வர் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதியும், அறைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறினர். அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, அவமானப்படுத்தி வெளியில் அனுப்பி உள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பரிந்துரை கடிதத்துடன் சென்ற மதுரை மத்திய தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ., திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக மதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்எல்ஏ சுந்தரராஜன் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிபாரிசு கடிதத்தை பெற்று வந்தார். அக்கடிதத்தை திருமலையில் உள்ள கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி அலுவலத்தில் வழங்கினார். ஆனால், அங்கிருந்த ஊழியர்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில முதல்வர் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதியும், அறைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறினர். அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, அவமானப்படுத்தி வெளியில் அனுப்பி உள்ளனர். 

இதுகுறித்து சுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில்;- தமிழகத்தில் பிரபலமான பழமை வாய்ந்த கோயில் பல உள்ளது. அதில், சுவாமி தரிசனம் செய்வதற்காக ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநில இருந்து முதல்வர்களும் முக்கிய பிரமுகர் வருகின்றன. அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டு தமிழக அரசால் சிறப்பான சுவாமி தரிசனம் செய்து வைக்கப்படுகிறது. ஆனால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதத்தை ஏற்க மறுத்துவிட்டனர்.

தமிழகத்தில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரக்கூடிய நிலையில் தமிழக முதல்வர் சிபாரிசுகள் இதயத்திற்கு சுவாமி தரிசனம் செய்து வைக்க முடியாது என்று கூறி இருப்பது வருத்தமளிக்கிறது. இதுகுறித்து ஆந்திர முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வெளிமாநில வரும் பிரதிநிதிகளுக்கு உரிய கவுரவம் வழங்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். மேலும், திருமலைக்கு வரும் பக்தர்களில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் தமிழர்கள். இதை மறந்து, தேவஸ்தானம் செயல்படுகிறது.

click me!