அடுத்த வருஷம் மார்ச்ல அ.தி.மு.க.வுல பாதி இருக்கக் கூடாது: கிண்டல் கிஷோர், ரசித்துக் களமிறங்கிய ஸ்டாலின்!

By Vishnu PriyaFirst Published Mar 1, 2020, 5:09 PM IST
Highlights

யாரையெல்லாம் பிரஷாந்த் இழுக்கச் சொல்லி லிஸ்ட் போட்டுள்ளாரோ அந்த நபர்கள் மீது ஸ்பெஷல் வெளிச்சம் விழுந்தது. சிலர் சம்பந்தப்பட்ட நபர்களுக்கே போன் போட்டு ‘என்ன உண்மைதானா? நம்ம எதிரிக்கட்சிக்கு மாறப்போறீங்களா! இதெல்லாம் அம்மாவுக்கு செய்ற துரோகமில்லையா!’ என்று சிலர் வருந்தியுள்ளனர்.

ஏஸியா நெட் தமிழ் இணையதளத்தி நேற்றுதான் அந்த செய்தியை வெளியிட்டிருந்தோம், ‘மிஸ்டர் ஸ்டாலின், இவங்களையெல்லாம் தூக்கிட்டு வாங்க’ என்று அ.தி.மு.க.விலிருந்து அதிருப்தி தலைகளை தி.மு.க.வுக்குள் இழுக்கச் சொல்லி,  தி.மு.க.வின் அரசியல் ஆலோசகரான பிரஷாந்த் கிஷோர் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்திருக்கும் விவகாரத்தை. 
பிரபல வாரம் இருமுறை அரசியல் புலனாய்வு இதழிலும் டீல் செய்யப்பட்டிருந்த அந்த விவகாரத்தை, நமது இணையதளம் மிக வெளிப்படையாக எக்ஸ்போஸ் செய்தததோடு, தனக்கு பிரஷாந்த் கொடுத்த அந்த அஸைன்மெண்டை தன் மகன் உதயநிதிக்கு, தி.மு.க. தலைவர் கைமாற்றி விட்டதையும் விரிவாக குறிப்பிட்டிருந்தோம். 
நமது அந்தக் கட்டுரை அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. என இரண்டு முகாமினை சேர்ந்த எல்லோரது மொபைலிலுமே பற்றி எரிந்தது. ஆளாளுக்கு ஷேரிங், அனலைஸிங் என்று அந்த கட்டுரையை மையமாக வைத்துப் பரபரக்க துவங்கினர். இரண்டு எம்.எல்.ஏ.க்களை அடுத்தடுத்து இழந்த துக்கத்தில் இருந்த தி.மு.க.வை, அதையும் தாண்டி இந்த பரபரப்பு பேச வைத்தது.

அ.தி.மு.க.விலோ உச்சம் தொட்டது இந்தக் கட்டுரை. யாரையெல்லாம் பிரஷாந்த் இழுக்கச் சொல்லி லிஸ்ட் போட்டுள்ளாரோ அந்த நபர்கள் மீது ஸ்பெஷல் வெளிச்சம் விழுந்தது. சிலர் சம்பந்தப்பட்ட நபர்களுக்கே போன் போட்டு ‘என்ன உண்மைதானா? நம்ம எதிரிக்கட்சிக்கு மாறப்போறீங்களா! இதெல்லாம் அம்மாவுக்கு செய்ற துரோகமில்லையா!’ என்று சிலர் வருந்தியுள்ளனர். பலரோ ‘சரியான முடிவுதான். உங்களோட தகுதிக்கெல்லாம் இங்கே இப்படி ஓரங்கட்டப்பட்டு அவமானப்படுறதை விட, அங்கே போயிடுங்க.’ என்று பல வகையான ஆங்கிள்களில் இது பேசப்பட்டது. ஆனால், அந்த லிஸ்டில் உள்ள நபர்களோ இந்த பரபரப்பையெல்லாம் ஒரு மர்மப் புன்னகையோடு கடந்து சென்றனர். 
உண்மையைச் சொல்லப்போனால் அவர்களுக்கு இது பெரும் பாஸிடீவ் விஷயம்தான். காரணம், சில வருடங்களாக ஓரங்கட்டப்பட்டு, சில மாதங்களாக கடும் விமர்சனத்துக்கு ஆளாகியும் கிடந்த அவர்களை இந்த தகவல் திடீரென ஹீரோவாக்கிக் காட்டியது.  அதேவேளையில் அ.தி.மு.க.வின் சீனியர் தலைகள் சிலர், மேற்படி லிஸ்டில் உள்ள நபர்களை விமர்சிக்கவும் தவறவில்லை தங்களின் நெருங்கிய வட்டாரத்தில்....’அன்வர் ராஜா போறதாலே ராமநாதபுரம் மாவட்டத்துல அ.தி.மு.க. அழிஞ்சா போயிட போகுது? தமிழ்மகன் உசேனுக்கு பின்னாடி எத்தனை ஓட்டுக்கள் இருக்குதுன்னு சொல்லுங்க பார்ப்போம்! புத்திச்சந்திரனுக்கு சொந்த ஊர்லேயே பெரிய செல்வாக்கு கிடையாது.’ என்று கடுமையாக விமர்சித்தவர்கள்....’இவங்க எல்லாரும் போனா தாராளமா போகட்டும். சந்தோஷம்’ எனும் ரேஞ்சுக்கு பேசினர். 


இந்த தகவலானது அந்த லிஸ்டில் இருப்போரின் கவனத்துக்குப் போக ‘எங்களை இப்படி பேசின அந்த அமைச்சருக்குப் பின்னாடி எத்தனை ஓட்டுக்கள் இருக்குதுன்னு  சொல்லச் சொல்லுங்க. மோசமா நடந்து அம்மாவின் பெயரையும், கட்சியின் தன்மானத்தையும் அசிங்கப்படுத்தி வெச்சிருக்கார், இவரெல்லாம் எங்களோட செல்வாக்கைப் பத்தி பேசலாமா? நாங்க தி.மு.க.வுக்கு போறோமுன்னு சொல்றது வதந்தி, ஆனால் உள்ளே இருந்துகிட்டே இவரோட வண்டவாளங்களை பேச ஆரம்பிச்சா, அமைச்சரவை தாங்காது.” என்று எகிறினர்.  ஆக மொத்தத்தில் பி.கே. எனப்படும் பிரஷாந்த் கிஷோர் போட்ட லிஸ்ட் பற்ற வைத்த பரபரப்பானது அ.தி.மு.க.வினுள் அதிரிபுதிரியாக வெடித்தது. உட்கட்சிக்குள் மிகப்பெரிய வார்த்தைப் போர் துவங்கிவிட்டது, பதவிகளில் இருப்போருக்கும் மற்றும் ஓரங்கட்டப்பட்டோருக்கும் இடையில். 


இந்த தகவல் அப்படியே அறிவாலயத்தின் கவனத்துக்குப் போக, அவர்கள் பி.கே.வுக்கு பாஸ் பண்னிட, நமுட்டுச் சிரிப்பாய் சிரித்த பிரஷாந்த் கிஷோர் ’இதைதானே நானும் எதிர்ப்பார்த்தேன். நாம இழுக்குறது பாதி, தானா உட்கட்சி பிரச்னையில் வெளியில் வர்றது மீதின்னு இன்னும் ஒரு வருஷத்துல, அதாவது அடுத்த மார்ச்க்குள்ளே அ.தி.மு.க.  கூடாரம் பாதி காலியாகிடணும்.’ என்றிருக்கிறார். இதை ரசித்துக் கேட்ட ஸ்டாலினும், மேற்படி ஆட்களை இழுப்பதில் மேலும் புத்துணர்ச்சியோடு களமிறங்கியிருக்கிறாராம். 
என்ன செய்யப்போறேள் இ.பி.எஸ். சார்?!

click me!