கோபாலபுரத்து சீமான்களின் வாரிசாக வந்தவர் இல்லை முருகன் எனவே அவர் Unfit தான். இத்தனை ஆண்டுகள் பட்டியல் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்தும் மத்தியில் அமைச்சராக இருந்தும் முறையற்ற வழியில் கோடி கோடியாய் பணம் சேர்க்கவில்லை எனவே Unfit தான்.
திமுக எம்.பி. டி.ஆர்.பாலு மத்திய அமைச்சர் எல்.முருகனை மிகவும் கொச்சையாக பேசியதற்கு உண்மையில் நாம் இதற்கு கோபம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என இராம ஶ்ரீனிவாசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக பொதுச்செயலாளர் இராம ஶ்ரீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: மத்திய அமைச்சர் எல்.முருகனை திமுக எம்.பி. டி.ஆர்.பாலு மிகவும் கொச்சையாக பேசி அவமானப்படுத்த முயற்சித்திருக்கிறார். 'Unfit' என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார். உண்மையில் நாம் இதற்கு கோபம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எல்.முருகனே கூட Unfit அமைச்சர்தான்.
இதையும் படிங்க: எல்.முருகனை சாதிய ரீதியாக அவமானப்படுத்திட்டாங்க! டி.ஆர் பாலு மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிந்திடுக-பாஜக
கோபாலபுரத்து சீமான்களின் வாரிசாக வந்தவர் இல்லை முருகன் எனவே அவர் Unfit தான். இத்தனை ஆண்டுகள் பட்டியல் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்தும் மத்தியில் அமைச்சராக இருந்தும் முறையற்ற வழியில் கோடி கோடியாய் பணம் சேர்க்கவில்லை எனவே Unfit தான். சினிமாவில் நடித்து புகழ் சேர்க்கவில்லை எனவே Unfit தான்.
என்னை புதைத்த இடத்தில் கோபாலபுரத்து அடிமை அங்கே சமாதியில் இருக்கிறான் என்று சொல்லுங்கள் என்று மூத்த திமுக தலைவர்களே சொல்வது போல கொத்தடிமை சாசனம் எழுதவில்லை அவர். எனவே அவர் Unfit தான்.
இதையும் படிங்க: பாஜகவில் இணைந்த மாஜி அதிமுக அமைச்சர், எம்எல்ஏக்கள்... எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கிறரா அண்ணாமலை.?
திருட்டு ரயில் ஏறி அரசியலுக்கு வந்தவர் அல்ல அவர், எனவே Unfit தான். ஒன்று இரண்டு மூன்று என்று வாழ்க்கைத் துணை நலன்களை வரிசைப்படுத்திக் கொண்டவர் அல்ல அவர். எனவே அவர் Unfit தான். ஒரு செருப்பு தைப்பவரின் பேரன் உலகத்தின் மிகப் பெரும் ஜனநாயகத்தில் மத்திய அமைச்சராக இருக்கிறார் என்பதையும், அப்படிச் செய்தவர் நரேந்திர மோடி என்பதையும் இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இவர்களின் ஜனநாயகப் பண்பே இவ்வளவுதான்.
ஏன் இவ்வளவு கோபம் முன்னாள் அமைச்சரே?. முரசொலி அறக்கட்டளைக்கு பஞ்சமி விவகாரத்தில் முருகன் சம்மன் அனுப்பினாரே என்ற கோபமா. வேல் யாத்திரை நடத்தி உங்களது இந்து விரோத போக்கை தோலுரித்தாரே என்ற கோபமா. சாமானிய ஒருவன் கோபாலபுரத்து சீமான்களுக்கு சமமாக கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறானே என்று கோபமா? 'Fitness Challenge' க்கு நாங்கள் தயார் அமைச்சரே நீங்கள் தயாரா??? அடுத்த நாடாளுமன்றத்திலும் எல்.முருகன் அமைச்சராக தொடர்வார். அடுத்த நாடாளுமன்றத்தில் உங்களுக்கு அமர இடம் இருக்குமா அந்த 'Fitness' உங்களுக்கு இருக்குமா அமைச்சரே?" என்று தெரிவித்துள்ளார்.