நான் பாஜகவில் சேர்ந்தேனா.? பட்டியலில் என் பெயர் எப்படி வந்ததுனே தெரியலையே.!! அதிமுக மாஜி எம்எல்ஏ ஷாக் தகவல்

By Ajmal Khan  |  First Published Feb 8, 2024, 9:17 AM IST

நான் பாஜகவில் சேரவில்லை, எடப்பாடி பழனிசாமி அவிநாசிக்கு வருவதையொட்டி கட்சி பணிகளை செய்து வருகிறேன் என தெரிவித்துள்ள மாஜி எம்எல்ஏ கருப்பசாமி, பாஜக பட்டியலில் என் பெயர் எப்படி வந்தது என தெரியவில்லைன கூறியுள்ளார்.


பாஜகவில் இணைந்த மாஜி எம்எல்ஏக்கள்

தமிழகத்தில் கடந்த 5 வருடங்களாக பாஜக அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. இந்த நிலையில் வருகிற நாடாளுமன்ற தேர்தலையும் இரண்டு கட்சிகள் கூட்டணி அமைத்து எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகி ஷாக் கொடுத்தது. இதனையடுத்து அதிமுகவுடன் பல கட்ட சமாதான பேச்சு எடுபடாத நிலையில் தனியாக கூட்டணியை அமைக்க பாஜக முயன்று வருகிறது. இந்தநிலையில் அதிமுக நிர்வாகிகளை பாஜகவிற்கு இழுக்கும் பணியை கட்சி மேலிடம் மேற்கொண்டது. அந்த வகையில் 1970 முதல் 2000ஆம் ஆண்டு வரை அதிமுக எம்எல்ஏக்களாக இருந்த மாஜி எம்ஏல்ஏக்கள் 18 பேர் பாஜகவில் இணைய இருப்பதாக பட்டியல் வெளியானது.

Tap to resize

Latest Videos

ADMK vs BJP : 18 மாஜி அதிமுக எம்எல்ஏக்களை தட்டி தூக்கிய பாஜக... அவசரமாக டெல்லி சென்ற அண்ணாமலை- எடப்பாடி ஷாக்

நான் பாஜகவில் சேர்ந்தேனா.?

இந்த பட்டியலில்  அதிமுக மாஜி எம்எல்ஏக்களான கு.வடிவேல் - கரூர், 2. P.S. கந்தசாமி - அரவக்குறிச்சி, திருமதி. கோமதி சீனிவாசன் (முன்னாள் அமைச்சர்) - வலங்கைமான், 4. திரு.R.சின்னசாமி -சிங்காநல்லூர் உள்ளிட்ட 18 பேர் பெயர்கள் இடம்பெற்றிருந்தது. இதனையடுத்து நேற்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் 14 அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்.

இந்த நிலையில் பாஜகவின் பட்டியலில் தனது பெயரும் இடம்பெற்றிருந்ததற்கு அவிநாசி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஏ.கருப்பசாமி அதிர்ச்சி அடைந்துள்ளார். தான் அதிமுகவிலேயே தொடர்ந்து நீடிப்பதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,   என்னை பாஜகவில் இணைய வலியுறுத்தி காரைக்குடி முன்னாள் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி தொடர்பு கொண்டார்.

அதிமுகவில் தான் நீடிக்கிறேன்

இதனை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் இணையவில்லை என்று தெரிவித்துவிட்டேன். இந்தநிலையில் பட்டியலில் என் பெயர் எப்படி வந்தது என எனக்கு தெரியவில்லை.  அதிமுகவில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாஎனக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்கி உள்ளார். இந்த கட்சியை விட்டு நான் வேறெந்த கட்சிக்கும் செல்லமாட்டேன் என தெரிவித்தார். மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவிநாசி தொகுதிக்கு நாளை வரும் நிலையில் அதற்கான பணியை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார். 

இதையும் படியுங்கள்

எல்.முருகனை சாதிய ரீதியாக அவமானப்படுத்திட்டாங்க! டி.ஆர் பாலு மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிந்திடுக-பாஜக

click me!