காலநிலை மாற்றம் மற்றும் பாலின சமத்துவம் தொடர்பான கருத்தரங்கம் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நடந்தது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மாணவிகள் மத்தியில் உரையாற்றினார்.
மாசு பிரச்சனையால் சென்னையில் ஆண்டுக்கு நான்காயிரம் பேர் உயிரிழக்கும் சூழல் உள்ளது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
காலநிலை மாற்றம் மற்றும் பாலின சமத்துவம் தொடர்பான கருத்தரங்கம் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நடந்தது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மாணவிகள் மத்தியில் உரையாற்றினார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அன்புமணி: மகளிருக்கு வழங்குவதைப் போல சென்னையில் ஆண்கள் அனைவருக்கும் இலவசப் பேருந்துகள் கொடுக்க வேண்டும். பிறகு படிப்படியாக , வாய்ப்புள்ள இடங்களில் இதனை விரிப்படுத்த வேண்டும். அப்போதுதான் பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துவார்கள்.
undefined
இதையும் படிங்க: ஆற்றங்கரையோரம் கிடந்த மனித உடல்பகுதி.. வெற்றி துரைசாமியின் நிலை என்ன? வெளியான பரபரப்பு தகவல்..!
சென்னையில் தற்போது 3,500 பேருந்துகள் இருக்கும் நிலையில், அதை 8,000 பேருந்துகளாக உயர்த்த வேண்டும். மாசு பிரச்சனையால் சென்னையில் ஆண்டுக்கு 4,000 பேர் இறக்கும் சூழல் உள்ளது. இதனைத் தவிர்க்க தமிழக அரசு பல்வேறு புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். காலநிலை மாற்றத்தால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக அரிசி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: கூட்டணியில் இழுபறி.! 12 மக்களவை தொகுதி, 1 ராஜ்ய சபா சீட் கேட்கும் பாமக.? பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்த ராமதாஸ்
மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக சில கட்சிகளுடன் பேசி வருகிறோம். அது யார் என இப்போது சொல்ல முடியாது. அதிமுக உடன் பாமக கூட்டணி என வதந்தி பரப்ப வேண்டாம். சி.வி.சண்முகம் ராமதாஸ் சந்திப்பு மரியாதை நிமித்தமானது. அப்போது அரசியல் பேசவில்லை என அன்புமணி தெரிவித்துள்ளார்.