#BREAKING தமிழகத்திற்கு ஏப்.6ல் சட்டமன்ற தேர்தல்... தேதியை அறிவித்தது தலைமை தேர்தல் ஆணையம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Feb 26, 2021, 5:32 PM IST
Highlights


தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் மார்ச் 12 முதல் மார்ச் 19ம் தேதி வரையிலும், வேட்புமனு பரிசீலினை மார்ச் 20ம் தேதியும், வேட்பு மனுக்களை திரும்ப பெற மார்ச் 22ம் தேதி கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலத்திலும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து வருகிறார். 5 மாநிலங்களில் 2.7 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும் என சுனில் அரோரா அறிவித்துள்ளார். 

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் 18.68 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வாக்காளர்களின் பாதுகாப்பிற்கு மிக மிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தமிழகத்திற்கு தேர்தல் பார்வையாளர்களாக தர்மேந்திர குமார், அலோக் வர்தன் நியமியக்கப்பட்டுள்ளனர். ஆர்.கே. நகர், வேலூர் தொகுதி நேர்தல் பணப்பட்டுவாடா காரணமாக ரத்து செய்யப்பட்டதை சுட்டிக்காட்டிய சுனில் அரோரா, தமிழகத்தில் அதிக பண புழக்கும் இருக்கும் என்ற காரணத்தால் ஒய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரிகள் மது மகாஜன் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் செலவின பார்வையாளர்களாக நியமிக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் மார்ச் 12ம் தேதி முதல் மார்ச் 19ம் தேதி வரையிலும், வேட்புமனு பரிசீலினை மார்ச் 20ம் தேதியும், வேட்பு மனுக்களை திரும்ப பெற மார்ச் 22ம் தேதி கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி 234 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறும் என்றும், தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களிலும் மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

click me!