இன்னும் ஒரு மாதத்தில் தேர்தல் ... வச்சாம்பாரு ஆப்பு.. இன்னும் 37 நாட்கள்தான் உள்ளது.

By Ezhilarasan BabuFirst Published Feb 26, 2021, 5:27 PM IST
Highlights

தமிழக சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் மே 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதேபோல கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே ஜூன் மாதங்களில் நிறைவடைய உள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்றும் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்
என்றும்  தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.  மே 2-ஆம் தேதி தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 

தமிழக சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் மே 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதேபோல கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே ஜூன் மாதங்களில் நிறைவடைய உள்ளது. புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவி விலகியதை தொடர்ந்து அங்கு சட்டசபை காலியாக உள்ளது. இந்நிலையில் இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்து வருகிறது. 5 மாநிலங்களில் தேர்தல் நடத்துவது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் ஐந்து மாநிலங்களிலும் நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் மாநிலங்களில்  தேர்தல் நடத்துவதற்கான சூழல் மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்றும் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்
என்றும்  தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார்  மே 2-ஆம் தேதி தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.  

 

click me!