தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு..! ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு

Published : Feb 26, 2021, 05:25 PM IST
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு..! ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு

சுருக்கம்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்தார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா.

தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதிகளை அறிவித்தார் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா.

இன்று மாலை 4.40 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததாக தெரிவித்தார்,.

தேர்தல் தேதி அறிவிப்புக்கான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சுனில் அரோரா, மே 24ம் தேதியுடன் தமிழக சட்டமன்ற பதிவிக்காலம் முடிவடைகிறது. தமிழகத்தில் 88,936 வாக்கு மையங்கள் உள்ளன. அனைத்து வாக்கு மையங்களும் தரைத்தளத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் வேட்புமனுத்தாக்கல் மார்ச் 10ம் தேதி தொடங்கி, மார்ச் 19ம் தேதி முடிவடைகிறது. வேட்புமனுவை மார்ச் 22ம் தேதிக்குள் திரும்பப்பெறலாம். ஏப்ரல் 6ம் தேதி தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கும். மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று சுனில் அரோரா தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

Annamalai Goes Viral: "வீடியோ எடுக்காதீங்க... வேலை செய்யுங்கள்!" – வைகை கரையில் அண்ணாமலை வைரல்
Cauvery Issue : கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிகளில் காவிரி பிரச்சனை தொடர்பாக நடந்த டாப் 10 சம்பவங்கள்!